Categories: சினிமா

தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ படம் வெளியாகியது!

வெளியிட்டது
தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ படம் வெளியாகியது! 1

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள படம், ‘பட்டாஸ்.’ இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சினேகா, மெஹ்ரின் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு தனுஷ் சிநேகா இனைந்து நடிக்கும் இந்தப் படத்தை துரை செந்தில்குமார் டைரக்டு செய்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. மேலும் இந்த படம், அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது என்று படத்தை பற்றி தயாரிப்பாளர் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். இந்த படத்தை பற்றி அவர் கூறுகையில்,

“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் தற்காப்பு கலையாக இருந்த அடி முறை கலையை கருவாக கொண்டது. இது இப்போதும் தென் மாவட்டங்களில் பழக்கத்தில் உள்ளது. தனுஷ் படத்திற்காக அடி முறை கலைகளை 6 மாதங்கள் பயிற்சி பெற்றார். படத்தில் அவருக்கு மனைவியாக வரும் சினேகாவும் இந்த கலையை கற்றுக் கொண்டார்.

தனுஷ் அப்பா மகன் என்ற 2 வேடங்களில் நடித்துள்ளார். படம், பொங்கல் விருந்தாக 1,500 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது. எப்போதும் குடும்பப்பாங்கான படங்களையே தயாரித்து வரும் எங்கள் பட நிறுவனம் ஆபாச காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனமோ இருக்காது. ‘பட்டாஸ்’ படமும் அப்படியே அமைந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், தணிக்கை குழுவினர், ‘யு’ சான்றிதழ் வழங்கி உள்ளது. தமிழ் திரையுலகில் மிகப்பெரிய பிரச்சனை, திருட்டு வி.சி.டி. மற்றும் இணையதளங்களில் படங்கள் வெளியாவது தான். இந்த குற்றங்களை செய்யும் தமிழ் ராக்கர்ஸ், நார்வேயில் உள்ளது. பிரச்சினை எழும்போதெல்லாம் எழுகிறதோ அந்த சமயம் தமிழ் ராக்கர்ஸ் தங்களின் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அரசாங்கம் முயற்சி செய்தால், இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரலாம் என்றார்.

‘தர்பார்’ படம், ‘வாட்ஸ் அப்’பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சத்யஜோதி பிலிம்ஸ் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.” என்று கூறியுள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்