Categories: சினிமா

சண்டை காட்சிகள் இடம்பெற்றதாக கூறி ‘யூ’ சான்று மறுப்பா?தர்பார் படத்துக்கு ‘யூஏ’ சான்றிதழ்!!

வெளியிட்டது
சண்டை காட்சிகள் இடம்பெற்றதாக கூறி ‘யூ’ சான்று மறுப்பா?தர்பார் படத்துக்கு ‘யூஏ’ சான்றிதழ்!! 1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வர இருக்கிறது ‘தர்பார்’ படம். இந்த படம் வருகிற 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இதில் ரஜினி மும்பை போலீஸ் கமிஷனர் கதாபாத்திரத்தில் வருகிறார். டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. பாடல்களும் வெளியிடப்பட்டன. படத்தில் இடம்பெற்றுள்ள டும் டும் பாடலில் இருந்து சில வீடியோ காட்சிகளையும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் தனது வெப் சைட்டில் பகிர்ந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் மட்டும் தர்பார் சிறப்பு காட்சியை ஒரு நாள் முன்னதாக 8-ந்தேதியே வெளியாகிறது. இந்த நிலையில் தர்பார் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி அனைத்து வயதினரும் பார்க்கும் வகையில் யூ சான்றிதழ் பெற முயற்சி செய்து வந்தனர். ஆனால் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ரஜினிகாந்த் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சிகளிலும் மும்பை தாதாக்கள், ரவுடிகளின் அட்டூழியங்களிலும் அதிக வன்முறைகள் இருப்பதை சுட்டிக்காட்டி யூ சான்றிதழ் அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ‘யூ ஏ’ சான்றிதழ் தர்பார் படத்துக்கு தணிக்கை குழு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் நாயகியாக நயன்தாரா , சுனில் ஷெட்டி வில்லனாகவும் ரஜினியின் மகளாக நிவேதா தாமசும் நடிக்கின்றனர். யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் ஆகியோரும் உள்ளனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்