ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அண்ணா’ சீரியலில் இருந்து நடிகை ஒருவர் நேற்று வெளியேறி விட்டதாக அறிவித்த நிலையில் அவருக்கு பதில் யார் புதிதாக நடிக்க இருக்கிறார்கள்? என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல நடன நிகழ்ச்சியாக இருக்கும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் இருந்து ஒருவர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஜீ தமிழில் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது ‘அண்ணா’ சீரியல்.

இந்த சீரியலில் சரவணன் மீனாட்சி பிரபலம் செந்தில், நித்யா ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். நான்கு தங்கைகளும் மற்றும் அவர்களின் அண்ணனும் என்கிற கருவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இவர்களுடன் இணைந்து சுனிதா, ப்ரீத்தா சுரேஷ், ஹேமா சின்ராஜ், ரேமா அசோக், விஜே தாரா, பூவிலங்கு மோகன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதில் விஜே தாரா சில நாட்களுக்கு முன்பு ‘சந்தியாராகம்’ தொடரில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதால் இந்த சீரியலை விட்டு விலகி இருந்தார். அவருக்கு பதிலாக தர்ஷு சுந்தரம் அவரது கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார்.
இந்த நிலையில் நேற்று தர்ஷு சுந்தரமும் சீரியலை விட்டு விலகி இருப்பதாக அறிவித்திருந்தார். வீரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் ஃபைனலிஸ்டாக இருக்கும் கௌரி என்பவர் வீரா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது் விரைவில் புது வீராவாக கௌரி நடிக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.