ஏ ஆர் ரகுமான் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சியில் பல குளறுபடிகள் நடந்தேறிய முறையில், தற்போது அது குறித்து மற்றொரு இசையமைப்பாளரும், இசையமைப்பாளர்கள் சங்கத் தலைவருமான தீனா காட்டமான பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். 20 கோடியை வாங்கிக்கொண்டு தமிழக மக்களை ஏ ஆர் ரகுமான் ஏமாற்றி விட்டதாகவும் இதற்கு அவர் உரிய பதிலை சொல்லியே ஆக வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அவரின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்றைய தினம் தொடங்கி சமூக வலைதளங்களில் சர்ச்சையாகிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு தான் ஏ.ஆர் ரகுமான் ஏற்பாடு செய்திருந்த “மறக்குமா நெஞ்சம்” என்ற இசை விழா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இசையமைப்பாளர்கள் பலரும் இது போன்ற இசை வெளியீட்டு விழாவை நடத்தி பணம் சம்பாதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் மற்ற இசையமைப்பாளர்கள் செய்த ஏற்பாடுகள் அனைத்தும் சரியாக இருந்த நிலையில் நேற்றைய தினம் ஏ.ஆர் ரகுமானின் இசை விழாவை ஏற்பாடு செய்திருந்த நிறுவனம் சொதப்பி இருந்தது. பிளாட்டினம், கோல்ட், நார்மல் டிக்கெட் என பல வகைகளில் டிக்கெட்களை விற்பனை செய்துவிட்டு அனைவரையும் ஒன்றாக உள்ளே அனுப்பியது இந்த நிறுவனம். இதனால் பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. பெண்களிடம் சிலர் ஆபாசமாகவும் நடந்து கொண்டனர்.
இதனால் ரசிகர்கள் அரங்கத்தை விட்டு வெளியேறியும், டிக்கெட்டுகளை கிழித்து எறிந்தும் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இதனால் தான் மிக மன உளைச்சலுக்கு ஆளானதாக ஏ.ஆர் ரகுமான் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். மேலும் தான் உள்ளே இருந்ததால் வெளியில் என்ன நடந்தது தெரியாது என்றும் அவர் பதிவிட்டிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இசையமைப்பாளர்கள் சங்க தலைவர் தீனா, “ஏ.ஆர் ரகுமான் தனக்குத் தெரியாது என்று பொறுப்பற்ற முறையில் பதில் சொல்வது ஏற்புடையதாக இல்லை. 20 கோடியை வாங்கிக்கொண்டு ஏ ஆர் ரகுமான் தமிழக மக்களை ஏமாற்றி விட்டார்” என்று காட்டமான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Thanthi TV