Categories: சினிமா

பிரபல நடிகையை செல்லமாக கொஞ்சி கூப்பிடும் தனுஷ்! யார் அந்த நடிகை தெரியுமா?

வெளியிட்டது

மாளவிகா மோகனன் பேட்டை படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மலையாள திரையுலகில் கலக்கி கொண்டிருந்த இவர் தமிழில் பேட்ட திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் தான் முதலில் நடித்தார். இவருடைய வசீகரத் தோற்றம் அனைவரையும் கவர்ந்ததால் இவருக்கு இணையதளத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த மாளவிகா மோகனன் தனது இரண்டாவது படத்திலே தளபதி விஜய்யுடன் நடிக்கும் வாயப்பினை பெற்றார்.

பிரபல நடிகையை செல்லமாக கொஞ்சி கூப்பிடும் தனுஷ்! யார் அந்த நடிகை தெரியுமா? 1

தளபதிக்கு ஜோடியாக நடித்த “மாஸ்டர்” படம், வெற்றிநடைப்போட்டது. இவருக்கும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. ரசிகர்கள் அடுத்து மாளவிகா மோகனன் எந்த படத்தில் யாருடன் நடிப்பார் என ஆவலாக எதிர்ப்பார்த்தனர். கடந்த வருடம் தனுஷ் பிறந்த நாளன்று இவர் தெரிவித்த வாழ்த்துதான் இவருக்கு அடுத்த பட வாய்ப்புக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார்.மாளவிகா மோகனன் நடிகர் தனுஷ் உடன் நடிக்க ஆசை என்று அவரிடமே கூறியதால், நடிகர் தனுஷ் மாளவிகா மோகனனின் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார்.

ஆம், தனுஷ் அடுத்து நடித்து கொண்டிருக்கும் தனது 43வது படத்தில் கதாநாயகியாக மாளவிகா நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தை துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய இளம் இயக்குனரான கார்த்திக் நரேன் இயக்குகிறார். முதற்கட்டப் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் தனுஷ் மற்றும் மாளவிகா நட்பு பெருகியது.

இதன் காரணமாக தனுஷ் மாளவிகா மோகனன் என்பதை சுறுக்கி மால்மோ என்று செல்லமாக அழைப்பார் என்று மாளவிகா கூறியுள்ளார். தன்னுடைய நண்பர்கள் உறவினர்கள் தன்னை மாலு என்று அழைப்பர் என்றும் கூறியுள்ளார். தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு காத்திருப்பதாகவும் மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். இனிமேல், தனுஷின் ரசிகர்களும் மாளவிகாவை மால்மோ என்றே அழைக்கபோகின்றனர்.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்