இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனிக்கு இன்று 41வது பிறந்தநாள். பிறந்தநாளை முன்னிட்டு அவர் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோவை அவரது மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். ஜூலை 4ல் 12வது திருமணநாளையும், ஜூலை 7ல் 41வது பிறந்த நாளையும் லண்டனில் கொண்டாடி வருகிறார் தோனி. 2010ம் ஆண்டு தனது பள்ளி தோழியான சாக்ஷியை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு 2015ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெயர் ஷிவா.எப்போது மேட்ச் இருந்தாலும் தானும் தனது மகளையும் அழைத்து சென்று தோனியை உற்சாகப்படுத்துவர் சாக்ஷி. இந்திய கிரிக்கெட் உலகில் அசைக்க முடியாத இடத்தில் உள்ளவர் தோனி. வெற்றி என்றாலும் தோல்வி என்றாலும் நிதானத்தை இழக்காமல் டென்ஷன் ஆகாமல் எப்போதும் ஒரே மாதிரி நடந்து கொள்ளும் கேப்டன். அதனால் தான் அவருக்கு கூல் கேப்டன் என்று பெயர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

ஒரு டிக்கெட் கலெக்டர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் பின்னர் தனது கடின உழைப்பால் இந்திய அணியின் கேப்டனாக மாறி இந்திய அணியை உலக கிரிக்கெட் அரங்கில் நிலை நாட்டிய ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். தமிழ் ரசிகர்கள் தல அஜித்திற்கு பிறகு செல்லமாக தல என்று கூப்பிடுவது தல தோனியை தான். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாய் ஒரு கிரிக்கெட் லெஜென்டாக பல கோடி ரசிகர்களை வைத்திருப்பவர் தல தோனி. இந்திய அணிக்காக அனைத்து சர்வதேச கோப்பைகளை வாங்கி கொடுத்த பெருமை தல தோனிக்கு உண்டு. பல ஆண்டுகளுக்கு பிறகு 2011 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்து பெருமை சேர்த்தார் தல தோனி. இப்படியொரு நிலையில் சர்வதேச போட்டிகளில் தன்னுடைய ஓய்வை அறிவித்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினார்.
இருந்தாலும் ஐ.பி.எல்லில் சென்னை அணிக்காக தோனி ஆடுவது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தது. இளம் வயதில் இவர் நீளமான முடி வைத்து இருப்பார். இவருடைய ஹெலிகாப்டர் ஷாட்டுகள் உலக அளவில் பிரபலம். நன்றாக இழுத்து பந்தை ஒரு அடி அடித்தால் பந்து பறந்து சென்று மைதானத்தை தாண்டி விழும். அப்படிப்பட்ட சிறந்த வீரர், உலக அரங்கில் இந்தியாவை பெருமை கொள்ள செய்த அவருக்கு இன்று 41வது பிறந்த நாள் மற்றும் 12வது திருமணநாள். இரண்டையும் தனது மனைவி மற்றும் மகளுடன் இணைந்து லண்டனில் கொண்டாடி வருகிறார் தோனி. அவர் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..Watch the below video..