Categories: சினிமா

ஹாரிஸ் இசையில் தரமா ஒரு பாட்டு.! துருவ நட்சத்திரம் படத்தின் 2nd சிங்கிள் “His Name is John” வெளியானது.!

வெளியிட்டது

நடிகர் விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது சிங்கிள் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. ஆறு வருட இடைவெளிக்கு பின்னர் தற்போது படத்தில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். நடிகர் விக்ரம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் படம்தான் துருவ நட்சத்திரம். இந்த படம் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. முதல் சிங்கிள் பாடல் வெளியாகி பின்னர் அப்படியே இந்த படம் கைவிடப்பட்டது. இந்த படத்தில் இருந்து எந்த விதமான அப்டேட்டுகளும் வெளியாகாமல் இருந்து வந்தது. இதனால் விக்ரமின் ரசிகர்கள் சோர்வில் இருந்தனர். இதனிடையே சமீபத்தில் மீண்டும் இந்த படத்தை தூசி தட்டி எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியானது. அந்த வகையில் இந்த படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் என்று வெளியாகும் என்று ஈ நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஹாரிஸ் இசையில் தரமா ஒரு பாட்டு.! துருவ நட்சத்திரம் படத்தின் 2nd சிங்கிள் "His Name is John" வெளியானது.! 1
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த நிலையில் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் வீடியோ என்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். அவர் சமீபத்தில் பேசியிருந்தபோது டால்பி 9.1.4 தரத்தில் திரையரங்குகளில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்று கூறி இருந்தார். இதனால் விக்ரம் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியில் இருந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ஜூலை 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது “ஹிஸ் நேம் இஸ் ஜான்” என்கிற லிரிக் வீடியோ வெளியாகி சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. விரைவில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஒன்றாக என்டர்டெயின்மெண்ட் என்கிற நிறுவனம் சார்பில் ப்ரீத்தி ஸ்ரீ விஜயன் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். “அவன் போறான் பிளைட்டில, இப்ப பறந்து புட்டான் ஹைட்டுல” என்ற வித்தியாசமான வரிகளுடன் தற்போது இந்த பாடல் வெளியாகியிருக்கிறது.! நீங்களும் அந்த வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Sony Music South

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்