Categories: சினிமா

கேங்ஸ்டராக மாறி பட்டைய கிளப்பும் சீயான்.! துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் இதோ

வெளியிட்டது

நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்திலிருந்து டீசர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் துருவ நட்சத்திரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சுமார் ஆறு ஆண்டுகளாக முடங்கி கிடந்த இந்த படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகி வருகிறது. கௌதம் வாசுதேவ் மேனன் விக்ரம் இணைந்து உருவான முதல் படம் தான் துருவ நட்சத்திரம். 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் சில காரணங்களால் தள்ளிக் கொண்டே போனது. பின்னர் பாதியில் இந்த படம் நின்று போனது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கேங்ஸ்டராக மாறி பட்டைய கிளப்பும் சீயான்.! துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் இதோ 1

ஐந்து ஆண்டுகளாக எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்த படத்தில் இருந்து ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு படக் குழுவினர் அதிர்ச்சி கொடுத்திருந்தனர். இஸ் நேம் இஸ் ஜான் என்று வெளியான அந்த ப்ரோமோ மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. துருவ நட்சத்திரம் படப்பிடிப்புகள் மீண்டும் துவங்கி இருக்கும் செய்தியை இந்த படத்தின் இசையமைப்பாளராக இருந்த ஹாரிஸ் ஜெயராஜ் உறுதிப்படுத்தி இருந்தார். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் கலந்த ஜூலை மாதம் 19ம் தேதி வெளியாகியிருந்தது. “அவன் போறான் பிளைட்ல, இப்ப புட்டான் ஹைட்டுல” என்கிற வரிகளுடன் வித்தியாசமாக வெளியாகி இருந்தது இந்த பாடல்.

பின்னர் இரண்டு மாத இடைவெளிக்கு பின்னர் தற்போது புது டீசர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sony Music South.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்