“ரயிலில் பாடி அசத்திய பெண்..வலைவீசி தேடி வரும் டி.இமான்”!!

வெளியிட்டது

திறமைகள் இருக்கும் இடத்திலேயே கலை வளரும். பல ரியாலிட்டி ஷோக்கள் நடக்கிறன. சிறப்பாக படக்கூடியர்வரகள், ஆடக்கூடியவர்கள், காமெடி செய்ய கூடியவர்கள் என பல்வேறு தொலைக்காட்சி சேனல்களிலும் பல்வேறு போட்டிகளை நடத்துகிறார்கள். பலர் வென்றும் இருக்கிறார்கள். ஆனால் இதில் முக்கியமான விஷயம் இதில் எத்தனை பேர் அங்கிருந்து கலைத்துறையில் வெற்றி கொடி நாட்டி உள்ளார்கள் என்பதே. சிலர் அந்த சாதனையை செய்து காட்டினாலும் பலர் காணாமலே போயுள்ளார்கள்.

மேடையில் ஏறி அவர்களது திறமைகளை காண்பித்து போதிலும் வாய்ப்புகள் இன்றி தவிக்கும் பலர் மத்தியில், அந்த மேடை கூட கிடைக்காமல் நல்ல திறமை கொண்டவர்கள் பலர் இந்த உலகில் உலவி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் இப்பொது தமிழக மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமடைந்து வருகிறார். சென்னையிலுள்ள ஒரு ரயிலில் அந்த பெண் கையில் வெறும் ஒரு சின்ன இசைக்கருவியை கொண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான “ஜீன்ஸ்” படத்தில் வரும் “கண்ணோடு காண்பதெல்லாம்” பாடலை மிகவும் அழகாக பாடி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

இந்த வீடியோ சில தினங்கள் முன்பு சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலானது. இதனை கண்டுள்ள இசையமைப்பளர் டி.இமான் இப்பொது அவரை தேடி வருகிறார். திறைமைசாலிகளை கண்டு கொண்டு அவர்களுக்கு ஏதேனும் ஒரு வாய்ப்பு வழங்க முறைப்பட்டு வருகிறார் டி.இமான். ஏற்கனவே இவர் கண்பார்வையற்ற பாடகர் திருமூர்த்திக்கு தன்னுடைய இசையமைப்பில் வெளியான படம் “களத்தில் சந்திப்போம்” படத்தில் பாட ஒரு வாய்ப்பு வழங்கினார். அதற்கு மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பாராட்டுகள் குவிந்தன. இப்பொது அதே போல இந்த பெண்ணையும் அவர் தேடி வருகிறார்.

"ரயிலில் பாடி அசத்திய பெண்..வலைவீசி தேடி வரும் டி.இமான்"!! 1

அதனை கண்ட மக்கள் சிலரும் இப்பொது அந்த பெண்ணை தேடி வருகிறார்கள். நேற்றைய தினம் முதலே இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் மிகவும் வேகமாக பகிரப்பட்டும், அந்த வைரல் பெண்ணையும் சிலர் தேடி வருகிறாரகள்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்