Categories: சினிமா

‘திண்டுக்கல் சாரதி’ பட ஹீரோயின் கார்த்திகாவை ஞாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க.!

வெளியிட்டது

‘திண்டுக்கல் சாரதி’ படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை கார்த்திகாவின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. உடல் எடை கூடி, மூன்று குழந்தைகளுடன் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருக்கிறார் நடிகை கார்த்திகா.

'திண்டுக்கல் சாரதி' பட ஹீரோயின் கார்த்திகாவை ஞாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க.! 1

அமெரிக்காவிலிருந்து அவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடிகைகள் அறிமுகம் ஆவதும், பின்னர் அவர்கள் நிலைக்க முடியாமல் காணாமல் போவதும் வழக்கமாக இருக்கிறது. சில படங்களில் நடித்தாலும் மக்கள் மனங்களில் இடம் பிடித்த ஒரு நடிகையாக இருக்கிறார் கார்த்திகா.


2001ம் ஆண்டு தமிழில் வெளியான ‘காசி’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கார்த்திகா. அதை பின்னர் ‘ஊமை பெண்ணின் உரியட பையன்’ என்கிற மலையாள படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனார். அதன்பின்னர் தமிழில் ‘என் மன வானில்’, ‘நம் நாடு’, ‘திண்டுக்கல் சாரதி’, ‘நாளை நமதே’, ‘ஆறு மனமே’, ‘மகிழ்ச்சி’, ‘பாலைவனச் சோலை’, ‘புலன்விசாரணை 2’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

2001ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பல மலையாள படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் வெளியான திரைப்படம் ‘புலன் விசாரணை 2’ அதன் பின்னர் இவர் திரைத்துறையிலிருந்து முற்றிலும் விலகினார்.


இவர் தனது நீண்ட நாள் காதலரான மேத்யூ என்பவரை 2009ம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர் மருத்துவரான இவர் அமெரிக்காவில் மருத்துவராக வேலை பார்த்து வருவதால், அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடல் எடை கூடி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருக்கிறார் கார்த்திகா. இவரின் இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் ‘திண்டுக்கல் சாரதி’ படத்தில் நடித்த ஹீரோயின் இவர் என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்