விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்ட தினேஷ் தற்போது முதல் முறையாக லைவ் வீடியோவிற்கு வந்திருக்கிறார் .அவர் பிக் பாஸ் குறித்தும், அதில் விளையாடியவர்கள் குறித்தும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூறும் பொழுது, “பிக் பாஸ் சீசன் 7ல் தன்னுடன் விளையாடிய அனைவருமே நல்ல போட்டியாளர்கள் தான். அவர்கள் தங்களுக்கு தெரிந்த அளவில் தங்களுடைய கேமை விளையாடினார்கள். ஆனால் தனக்கு பர்சனல் ஆக மிகவும் பிடித்த போட்டியாளர் என்றால் அது பிரதீப் ஆண்டனி தான். நான் வெளியில் இருந்து பார்த்தபோதிலிருந்து நேர்மையாக விளையாடிய ஒரே போட்டியாளர் அவர்தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நான் பிக்பாஸில் இருந்து ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டேன். நேர்மையாக இருக்க வேண்டும். யாருடைய விஷயத்திலும் தேவையில்லாமல் போய் மூக்கை நுழைக்க கூடாது என்று கற்றுக் கொண்டேன். நான் இரண்டு முறை கேப்டன் ஆனது தான் என்னுடைய பிக் பாஸ் வாழ்க்கையில் ஃபேவரைட் மொமெண்டாக இருந்தது. மேலும் டான்ஸ் மாரத்தானில் நான் படையப்பா கெட்டப்பில் ஆடிய போது தனக்கு கிடைத்த பெஸ்ட் பெர்பார்மர் என்பதும் தன்னால் மறக்க முடியாது. நான் பிக் பாஸ்க்கு உள்ளே சென்றதன் நோக்கம் நிறைவேறவில்லை. ஆனால் மக்கள் என்மீது அன்பை கொட்டுகிறார்கள். இந்த எதிர்பாராத நோக்கம் நிறைவேறியது. நான் பிக்பாஸ்க்கு உள்ளே சென்றதன் நோக்கம் நிறைவேறவில்லை.
ஏதாவது முன்னேற்றம் இருக்கும் என்று நினைத்து வெளியில் வந்து பார்த்தால், பஸ் பிரேக் டவுன் ஆனது போல நிற்கிறது. முன்னேறாமல் பின்னால் சென்று கொண்டிருக்கிறது. எனக்கு விசித்ராவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் தான் என்னுடைய வீழ்ச்சிக்கு காரணம் என பலரும் வெளியில் வந்த பின்னர் கருத்து கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. நான் எந்த ஒரு திட்டத்துடனும் இல்லை. வாழ்க்கையும் அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. கிடைக்கும் வேலையை நன்றாக செய்ய வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய நோக்கம். என்னை தொடர்ந்து ஆதரியுங்கள் என்று அவர் பேசினார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O