இனி இவருக்கு பதில் இவர்.! சீரியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பிக்பாஸ் பிரபலம் தினேஷ்.!

வெளியிட்டது

பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள நடிகர் தினேஷ் நடித்து வந்த தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக நீண்ட இடைவெளிக்கு பின்னர் கிடைத்த வாய்ப்பை தினேஷ் தவற விட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்து இன்று 63வது நாளில் அடி எடுத்து வைக்கிறது. 23 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பின்னர் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்டியாக வந்தனர். விஜே அர்ச்சனா, பிராவோ, அன்னபாரதி மற்றும் கானா பாலா ஆகிய ஐந்து பேரில் மூன்று பேர் வெளியேறிவிட, தினேஷ் மற்றும் அர்ச்சனா இருவர் மட்டுமே மீதம் இருந்து வருகின்றனர்.

இனி இவருக்கு பதில் இவர்.! சீரியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பிக்பாஸ் பிரபலம் தினேஷ்.! 1
இதில் தினேஷ் மற்றும் அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை தொடர்ந்து வழிகள் வழங்கி வருகின்றனர். இருவரும் அபாரமாக விளையாடி வருகின்ற நிலையில், தினேஷ் நடித்து வந்த ‘கிழக்கு வாசல்’ சீரியல் தினேஷை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த சீரியலில் அர்ஜுன் என்கிற கதாபாத்திரத்தில் தினேஷ் நடித்து வந்த நிலையில் அவருக்கு பதிலாக சசிந்தர் என்பவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராதிகாவின் ரேடான் மீடியா நிறுவனம் தயாரித்து வரும் ‘கிழக்கு வாசல்’ தொடரில் எஸ்ஏ சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் தினேஷ் அர்ஜுன் என்கிற கதாபாத்திரத்தில் எஸ்ஏ சந்திரசேகரன் மகளை திருமணம் செய்யும் நபராக நடித்து வந்தார்.


நீண்ட நாட்களுக்கு பின்னர் தினேஷிற்கு இந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக தினேஷ் – ரட்சிதா பிரிவிற்கு தினேஷிடம் வேலை இல்லை என்பது தான் காரணம் என்று கூறப்பட்டது. நீண்ட நாட்களாக எந்தவித பட வாய்ப்புகளும் கிடைக்காமல் இருந்து வந்த தினேஷுக்கு ‘கிழக்கு வாசல்’ சீரியல் வரமாக அமைந்திருந்தது. ஆனால் தினேஷ் தற்போது பிக் பாஸுக்கு சென்று விட்டதால் அந்த கதாபாத்திரம் வெளிநாடு செல்வது போல காட்டப்பட்டிருந்தது. இப்போதைக்கு தினேஷ் பிக் பாஸில் இருந்து வருவதாக தெரியவில்லை.

எனவே அவருக்கு பதிலாக இந்த கதாபாத்திரத்தில் ஏற்கனவே ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ போன்ற சீரியல்களில் நடித்து வந்த சசிந்தர் ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டார் என்றும், இனிவரும் நாட்களில் அவர்தான் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை பிக் பாஸால் தினேஷ் இழந்துவிட்டார் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்