தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தொடர்ந்து தளபதியை வைத்து தெறி,மெர்சல், பிகில் என வெற்றிப்படங்களை கொடுத்து அசத்தியிருந்தார். ராஜா ராணி படத்தின் மூலம் சினிமாவிற்குள் வந்த இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு சினிமாவில் கிடைத்து இருந்தது. இவரின் முதல் படம் தற்போது வரை பலருக்கும் விருப்பமான படங்களில் ஒன்றாக உள்ளது.

தமிழில் இருந்து இவர் தற்போது நேரிடையாக பாலிவுட் சென்றுள்ளார். நடிகர் ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய ஜவான் படம் ஆயிரம் கோடி வசூலை பெற்று மாபெரும் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது பாலிவுட் படங்களை இயக்க தொடங்கிவிட்டார். இதன் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்து இருக்கிறார் இயக்குனர் அட்லீ.
இவர் சின்னத்திரை நடிகை ப்ரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த இவருக்கு தற்போது மகன் பிறந்துள்ளார். இவர் தனது மகனுடன் வீட்டில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.