Categories: சினிமா

மகனுக்கு இறுதி சடங்கு செய்த இயக்குனர் பாரதிராஜா..! நெஞ்சை உருக்கும் காட்சிகள்..!

வெளியிட்டது

இயக்குனர் இமயம் பாரதி ராஜாவின் மகன் நடிகர் மனோஜ். தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மகால் படத்தில் கதையின் நாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். இப்படத்தை தொடர்ந்து சில படங்களில் மட்டுமே நடித்த இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் ஒன்றும் வரவில்லை. இதனால் சினிமாவில் இருந்து மிகப்பெரிய பிரேக் எடுத்தார். பின்னர் தொடர்ந்து சினிமாவில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று போராடி வந்தார் மனோஜ். பின்னர் இயக்குநர் ஆக களம் இறங்கிய இவர் மார்கழி திங்கள் என்ற படத்தினை இயக்கி உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மகனுக்கு இறுதி சடங்கு செய்த இயக்குனர் பாரதிராஜா..! நெஞ்சை உருக்கும் காட்சிகள்..! 1

இந்நிலையில் இருதய சிகிச்சை மேற்கொண்ட மனோஜ் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனோஜ் நேற்று உயிரிழந்துள்ளார். இந்த செய்தி தமிழ் சினிமாவை பெரும் சோகத்திற்கு ஆளாக்கி உள்ளது. தற்போது திரை நட்சத்திரங்கள் பலரும் மனோஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது பாரதி ராஜா தனது மகன் மனோஜுக்கு இறுதி சடங்கு செய்து உள்ளார்.இது காண்போரை கண்கலங்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

Embed Video Credits : Puthiyathalaimurai

வெளியிட்டது

புதிய செய்திகள்