ஏன்டா முட்டாள்களா.. நேத்து கட்சி ஆரம்பிச்சவனும், சீமானும் ஒன்னா.? கொதித்து எழுந்த இயக்குனர் களஞ்சியம்.!

வெளியிட்டது

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டு நாட்களே ஆகி இருக்கும் நிலையில் 2026ல் முதல்வர் யார்? சீமானா? விஜயா? என ட்விட்டரில் சிலர் கருத்துக்களை கேட்டு வந்தனர். இதை பார்த்த இயக்குனர் களஞ்சியம் தற்போது காட்டமான பதிவு ஒற்றை பகிர்ந்திருக்கிறார். “விஜய் மக்கள் இயக்கம்” என்கிற பெயரில் ரசிகர் மன்றம் வைத்து கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு உதவி செய்து வருகிறார் நடிகர் விஜய். இந்த மன்றத்தை தற்போது அரசியல் இயக்கமாக அவர் மாற்ற இருக்கிறார். “தமிழக வெற்றி கழகம்” என்கிற கட்சியை அவர் தொடங்கி தமிழக மக்களுக்கு இனி முழுநேரம் சேவை செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார்.

ஏன்டா முட்டாள்களா.. நேத்து கட்சி ஆரம்பிச்சவனும், சீமானும் ஒன்னா.? கொதித்து எழுந்த இயக்குனர் களஞ்சியம்.! 1
விஜய் தொடங்கி இருக்கும் இந்த கட்சியால் யாருடைய வாக்கு வங்கி அதிகம் பாதிக்கப்படும் என்று விவாதம் எழுந்திருக்கிறது. குறிப்பாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் வாக்கு வங்கியை விஜய் பிரிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலைநில் சமூக வலைதளங்களில் 2026ம் ஆண்டு யார் முதல்வராக வருவார்? என்கிற வாக்கெடுப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதில் சீமான் அல்லது விஜய் உங்கள் ஓட்டு யாருக்கு? என்று சில சேனல்கள் கருத்துக்கணிப்புகளையும் நடத்தி வருகின்றனர். இந்த பதிவை பகிர்ந்த இயக்குனர் மு. களஞ்சியம் காட்டமான பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.


அதில், “அவர் ஏன்டா முட்டாள்களா? நேத்து கட்சி ஆரம்பிச்சவனும் 14 வருஷமா தொண்டை தண்ணி வத்தக் கத்துறவனும் ஒன்னாடா? இன்னும் கொடி என்ன? கொள்கை என்ன? எதையும் சொல்லல அதுக்குள்ள அடுத்த முதல்வரா” என்று விமர்சித்திருக்கிறார். களஞ்சியம் தொடர்ந்து சீமானுக்கு ஆதரவாக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். இவர் 1996ம் ஆண்டு முரளி மற்றும் தேவயாணியை வைத்து ‘பூமணி’ என்று படத்தை இயக்கியிருந்தார். அதன் பின்னர் ‘கிழக்கும் மேற்கும்’, ‘மிட்டா மிராசு’, ‘கருங்காலி’ போன்ற படங்களை இயக்கியிருந்தார். இவர் இயக்கிய ‘முந்திரிக்காடு’ என்கிற படத்தில் சீமான் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.


தற்போது படங்களை இயக்காமல் சீமானின் தீவிர தொண்டராக மாறியிருக்கிறார். சீமான் எங்கு சென்றாலும் அவருடன் தொடர்ந்து பயணித்து வருகிறார் களஞ்சியம். இந்த நிலையில் இவர் 2026ம் ஆண்டு தேர்தலில் விஜய் மற்றும் சீமானை ஒப்பிட்டு வந்த கருத்துக்கணிப்பை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். விஜயின் அரசியல் வருகை நாம் தமிழர் கட்சிக்கு கலக்கத்தை ஏற்படுத்திருப்பதாக பலரும் கூறி வந்த நிலையில், தற்போது களஞ்சியம் விஜய்க்கு எதிராக எதிர்வினை ஆற்றி இருக்கிறார்.

Twitter Original Source From: Cholan Mu.Kalanjiyam

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்