சமீப காலமாகவே இளம் வயது மரணங்கள் அதிகரித்து வருகிறது. 25 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கூட மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுவதாக வரும் செய்திகள் கவலையளிக்கும் விதமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் இயக்குனராக இருந்த மணி நாகராஜ் மாரடைப்பால் மரணமான செய்தி திரையுலகினரை அதிர்ச்சிடைய வைத்துள்ளது. கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் மணி நாகராஜ். இவர் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து பென்சில் என்ற படத்தை இயக்கினார். 2016ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஊர்வசி, ஸ்ரீதிவ்யா, விடிவி கணேஷ், டிபி கஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்த படம் வெளியாவதற்கு பல ஆண்டுகள் எடுத்துக் கொண்ட போதிலும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பின்னர் அவர் தனது அடுத்த படத்தின் வேலையை ஆரம்பித்திருந்தார். அவர் தற்போது பி வாசு தயாரிப்பில், ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்திற்கு கர்ப்பிணிகள் என்று பெயரிடப்பட்டிருந்தது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனத்தைப் பெற்று இருந்தது. அதில் விசுவாசம் படத்தில் மகளாக வரும் அனிகா, நடிகை வனிதா விஜயகுமார், சீதா போன்றவர்கள் கர்ப்பமாக இருப்பது போன்ற ஒரு போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அவர் இன்று காலமான செய்தி திரையுலகினரை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இன்று மதியம் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். திருச்சியை சேர்ந்த அவருக்கு வயது 46. தனது இரண்டாவது படத்தை இயக்கிக் கொண்டிருந்த அவர் அந்த படம் வெளியாவதற்கு முன்பே உயிர் இழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எவ்வளவு வேலைப் பளு இருந்தாலும் தங்கள் உடல் நலனில் சிறிது கவனம் செலுத்த வேண்டும் என்பதே இந்த செய்தி நமக்கு உணர்த்துகிறது. இயக்குனர் மணி நாகராஜுக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கல்கள்..!
Youtube Video Code Embed Credits: CineUlagam