Categories: சினிமா

பொன்னியின் செல்வனுக்காக தேசிய விருது..! மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட இயக்குனர் Manirathnam…!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர் என்றால் அது மணிரத்தினம் தான். தனது கதைகளால் அசத்தி மக்களை பிரம்மிப்பாக்குவதில் வல்லவர். இவர் இயக்கத்துக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இவர் பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தில் உள்ளார். இவரின் நீண்ட நாள் கனவு என்பது பொன்னியின் செல்வன் தான். இப்படத்தை இயக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்தார் மணிரத்தினம்.

பொன்னியின் செல்வனுக்காக தேசிய விருது..! மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட இயக்குனர் Manirathnam...! 1

அதற்கான நேரம் வரவும் அதனை சரியாக கையாண்டு, மாபெரும் படைப்பான பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக எடுத்து இருந்தார். இப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்தது. இப்படத்திற்கு பிறகு நீண்ட ஆண்டுகள் கழித்து நடிகர் கமல்ஹாசன் உடன் தக் லைப் படத்தில் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்காக தேசிய விருது மணிரத்தினத்திற்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று அந்த விருதை தனது மனைவி சுஹாசினி உடன் வந்து குடியரசு தலைவர் கைகளால் பெற்றுக்கொண்டு உள்ளார். இந்த புகைப்படங்களை அவரது மனைவி சுஹாசினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்து உள்ளார். ரசிகர்கள் மணிரத்தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்