Categories: சினிமா

இளையராஜாவை மிமிகிரி செய்து பாடிய மிஷ்கின்.! மனுஷன் அப்படியே பாடுறாரே.!

வெளியிட்டது

இயக்குனர் மிஷ்கின் மேடையில் இளையராஜா பாட்டு ஒன்றை, அவரைப் போலவே பாடி அனைவரையும் கவர்ந்துள்ளார். இவருக்குள் இப்படி ஒரு திறமையா என்று அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 2006 ஆம் ஆண்டு வெளியான “சித்திரம் பேசுதடி” என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். அதற்குப் பிறகு இவர் அஞ்சாதே, நந்தலாலா, ஓநாயும், ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ போன்ற படங்களை எடுத்தார். இவர் கடைசியாக இயக்கிய சைக்கோ படம் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினை வைத்து இவர் இந்த படத்தை இயக்கி இருந்தார். சைக்கோ த்ரில்லரில் உருவாகியிருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இளையராஜாவை மிமிகிரி செய்து பாடிய மிஷ்கின்.! மனுஷன் அப்படியே பாடுறாரே.! 1

இதற்கு முன்பாக இவர் இயக்கிய பிசாசு படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இவரது படத்தில் ஒரு சோகம் இழையோடும். கூடவே திகில் கலந்த அனுபவத்தையும் அளிப்பதில் சிறந்த இயக்குனராக இருக்கிறார் மிஷ்கின். தற்போது இயக்குனர் மிஷ்கின் நடிகர் அவதாரமும் எடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார். மேலும் மிஷ்கினின் சகோதரர் ஆதித்யா இயக்கும் படம் டெவில், இந்த படத்தில் விதார்த், பூர்ணா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் மிஷ்கின். திரில்லர் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவரான மிஷ்கின், அவரது தம்பி இயக்கும் த்ரில்லர் படத்திற்கு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மிஷ்கின் பிசாசு 2 படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிஷ்கின் வெளித்தோற்றத்திற்கு சற்று கரடு முரடானவர் போலவே இருப்பார். ஆனால் அவர் உண்மையில் மிக ஜாலியான மனிதர். தற்போது மேடையில் இளையராஜாவைப் போல மிமிக்ரி செய்து அவர் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது. இவருக்குள் இப்படி ஒரு திறமையா? என்று ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்