“விஜயகாந்தை தயவுசெய்து இதுபோல கஷ்டப்படுத்த வேண்டாம்” என்று இயக்குனர் ஒருவர் வேண்டுகோள் எடுத்து இருக்கிறார். அவரின் இந்த வேண்டுகோளை விஜயகாந்த் தொண்டர்கள் பலரும் வரவேற்று வருகின்றனர். ஒரு காலத்தில் சிங்கம் போல, தமிழகத்தின் இரு துருவங்களாக இருந்த திமுக அதிமுகவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் விஜயகாந்த்.

தனது மக்கள் மன்றத்தை கட்சியாக மாற்றி மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசியலுக்கு வந்து, இன்று சரியாக உட்காரக்கூட முடியாத நிலைமையில் இருக்கிறார். அவரின் இந்த நிலையை பார்த்து தொண்டர்கள் மட்டுமல்லாமல் மக்கள் பலரும் வருந்தி வருகின்றனர். பல நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் கடந்த வாரம் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் சென்னையில் நடந்த தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்தார். சக்கர நாற்காலியில் வந்த அவர் நிமிர்ந்து கூட உட்கார முடியாமல் அப்போது சரிந்து சரிந்து விழுந்து கொண்டிருந்தார். மேலும் தொண்டர்களை பார்த்து கையசைப்பதற்காக அவரால் கைகளை கூட உயர்த்த முடியவில்லை. அருகில் இருந்தவர்கள் கைகளை தாங்கி பிடித்து தூக்கி காட்டிக் கொண்டிருந்தனர்.
அவரின் இந்த நிலைமையை பார்த்த ரசிகர்கள், தொண்டர்கள், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் வேதனையில் ஆழ்ந்தனர். உடல்நிலை சரியில்லாத மனிதரை எதற்காக இப்படி கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
அதில், “கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இப்பொழுது சரியான ஓய்வு தேவை, அவர் பூரண குணமடையும் வரை அவரை இப்படி எல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள், ப்ளீஸ்.! பிடித்த ஒரு நல்ல மனிதரை இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கு” என்று கண்ணீருடன் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவை பலரும் வரவேற்று வருகின்றனர். கேப்டனுக்கு ஓய்வு கொடுத்து அவரை வீட்டில் ஓய்வெடுக்க வைப்பது தான் சிறந்த தீர்வாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்பொழுதும் மருத்துவமனை, ட்ரீட்மென்ட் என்று வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் கேப்டனுக்கு இது புத்துணர்வு அளிப்பதாக இருக்கும்,எனவே அவரை இதுபோல் பொதுவெளியில் அழைத்து வருவதை தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் சிலர் வரவேற்றும் வருகின்றனர்..!
Twitter Original Source From: Pandiraj