தமிழின் முன்னணி இயக்குனராக இருந்த பேரரசுக்கு நித்தியானந்தா “தர்மத்தின் பாதுகாவலர் இந்து மதத்தை பாதுகாக்கும் பேரரசு” என்று விருது ஒன்றை அறிவித்திருக்கிறார். தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பேரரசு. இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், விஜயகாந்த்,்அர்ஜுன் போன்றவர்களை வைத்து படங்களை இயக்கியிருக்கிறார். குறிப்பாக இவர் இயக்கிய திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி போன்ற படங்கள் வேற லெவலில் ஹிட் அடித்து இருந்தன. இயக்குனர் பேரரசு எப்போதும் ஊர்களின் பெரை வைத்து படங்களை எடுப்பார். படங்களை எப்போது மட்டும் இல்லாமல் பல இடங்களில் சிறப்பு தோற்றங்களிலும் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக கடந்த 2015ம் ஆண்டு சாம்ராஜ்யம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படம் மலையாளத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. பின்னர் ஆறு ஆண்டுகளாக படங்களில் நடிக்காமலும், படங்களை இயக்காமலும் ஒதுங்கியே இருந்தார் பேரரசு. கடந்த ஆண்டு வெளியான மின்மினி என்ற படத்தில் நடிகராக நடித்திருந்தார். இது மட்டுமில்லாமல் பாடல்களை எழுதுவதிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. இவர் இயக்கிய திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களில் வந்த அனைத்து பாடல்களையும் இவரே எழுதி இருந்தார். மேலும் சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் அம்மாடி ஆத்தாடி பாடலையும் இவர் தான் எழுதியிருந்தார். இந்த பாடல்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்திருந்தன. தற்போது சில படங்களுக்கும் பாடல் எழுதி வருகிறார் பேரரசு.
இந்த நிலையில் பேரரசுக்கு நித்தியானந்தா தற்போது ஒரு விருது ஒன்றை வழங்கி கௌரவித்துள்ளார். அதாவது தர்மத்தின் பாதுகாவலர் என்ற விருதை பேரரசுக்கு நித்தியானந்தா அறிவித்திருக்கிறார். அந்த விருது சான்றிதழில் “கைலாசா சுயாட்சி மாநிலம்” என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து சில வருடங்களுக்கு முன்பு வெளியேறி நித்தியானந்தா ஒரு தனித் தீவில் கைலாச என்ற நாட்டை உருவாக்கிக் கொண்டு அங்கிருந்து ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்தி வருகிறார் ய. அவர் இருக்கும் இடத்தை இன்றளவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் அவர் இயக்குனர் பேரரசிற்கு இந்து மதத்தை பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகளுக்காக “தர்மத்தின் பாதுகாவலர்” என்ற விருதை கொடுப்பதாக கைலாசவிலிருந்து நித்தியானந்தா அறிவித்திருக்கிறார்.
மேலும் நித்தியானந்தாவை ஜகத்குரு மகா சன்னிதானம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் இந்த விருதை அளிப்பதாக அந்த சான்றிதழில் பொறிக்கப்பட்டுள்ளது.