Categories: சினிமா

ரசிகர்களிடம் திடீரென கெஞ்சிய இயக்குனர் SelvaRaghavan..! வெளியான வீடியோவால் பரபரப்பு..!

வெளியிட்டது

வித்தியாசமான கதைகளை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் ஆக வலம் வருபவர் செல்வராகவன். இவரின் இயக்கத்திற்கு என மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இவர் இயக்கிய புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படங்கள் அப்பொழுது ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை என்றாலும் தற்போது காவிய படங்களாக ரசிகர்கள் கண்களுக்கு தெரிந்து வருகிறது. அந்தளவிற்கு இவரது படங்கள் தற்போதைய ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களிடம் திடீரென கெஞ்சிய இயக்குனர் SelvaRaghavan..! வெளியான வீடியோவால் பரபரப்பு..! 1

இயக்குனர் ஆக இருந்து வரும் செல்வராகவன் தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்டார். தொடர்ந்து சாணிக்காயிதம் , பீஸ்ட், ராயன் என படங்களில் நடித்து நடிகராக அசத்தி வருகிறார் செல்வராகவன். இவர் அடுத்ததாக தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

இந்நிலையில் செல்வராகவன், ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அனைவரையும் தமிழில் பேச கூறியுள்ளார். மேலும் பெண்களுக்காக ஆங்கிலம் வேண்டாம், ஆங்கிலம் பேச வேண்டும் என்றால் அந்த பெண்ணே வேண்டாம் எனவும் கூறி உள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்