‘எதிர்நீச்சல்’ சீரியல் இயக்குனர் திருச்செல்வத்தின் பிறந்தநாள்.! கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் குழுவினர்.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் இயக்குனராக இருக்கும் திருச்செல்வத்திற்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது.

'எதிர்நீச்சல்' சீரியல் இயக்குனர் திருச்செல்வத்தின் பிறந்தநாள்.! கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் குழுவினர்.! 1

இதை முன்னிட்டு இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் பலரும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் பட்டுக்கோட்டையில் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் திருச்செல்வம். இவர் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்தார்.

2002ம் ஆண்டு வெளியான ,’மெட்டிஒலி’ நாடகத்தில் நடிகராகவும், துணை இயக்குனராகவும் பணியாற்றினார்.

அதன் பின்னர் 2003ம் ஆண்டு வெளியான ‘கோலங்கள்’ நாடகத்தை இயக்கியதன் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தார். இந்த நாடகத்தில் கதாசிரியராகவும், நடிகராகவும் திருச்செல்வம் இருந்தார்.

அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அல்லி ராஜ்ஜியம்’, ‘மாதவி’, ‘பொக்கிஷம்’, ‘சித்திரம் பேசுதடி’, ‘கைராசி குடும்பம்’ போன்ற பல சீரியல்களை இயக்கியிருந்தார்.

இதில் இவர் இயக்கிய ‘கோலங்கள்’ நாடகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை சுமார் 7 ஆண்டுகள் இந்த நாடகம் ஒளிபரப்பானது.

இதில் ‘தொல்காப்பியன்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்திருந்தார் திருச்செல்வம். தற்போது அவர் ‘எதிர்நீச்சல்’ சீரியலை இயக்கி வருகிறார்.

இந்த சீரியல் தமிழ் சின்னத்திரை உலகின் டாப் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது காணாமல் போன தர்ஷினி என்ன ஆனார்? அவரை எப்படி கண்டுபிடிப்பது? என்கிற எதிர்பார்ப்புடன் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருச்செல்வத்திற்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது.

இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பலரும் இணைந்து அவரது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பலரும் தங்களுக்கு பிடித்தமான இயக்குனராக இருக்கும் திருச்செல்வத்திற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்