Categories: சினிமா

எதிர்நீச்சல் இயக்குனர் திருச்செல்வம் தொடங்கி இருக்கும் புதிய முயற்சி..! அவரே மகிழ்ச்சியாக சொன்ன செய்தி..!

வெளியிட்டது

கோலங்கள் என்ற தொடரை இயக்கி பிரபலமாகியவர் இயக்குனர் திருச்செல்வம். இந்த தொடரில் இவர் நடித்தும் அசத்தி இருந்தார். பின்னர் மெட்டி ஒலி தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சின்னத்திரையில் உள்ளது. தேவயானியை வைத்து மாபெரும் ஹிட் கொடுத்து இருந்தார். இந்த சீரியல் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது.

எதிர்நீச்சல் இயக்குனர் திருச்செல்வம் தொடங்கி இருக்கும் புதிய முயற்சி..! அவரே மகிழ்ச்சியாக சொன்ன செய்தி..! 1

நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவர் இயக்கிய எதிர்நீச்சல் சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து உள்ளது. இந்த சீரியலுக்கு மாபெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகி உள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் இந்த சீரியல் இருந்த நிலையில், திடீரென முடிவுக்கு வந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. இந்நிலையில் இயக்குனர் திருச்செல்வம் புதியதாக யூடியூப் சேனல் தொடங்கி உள்ளார்.

சேர் டிக்கெட் என அந்த சேனலுக்கு பெயரிட்டு இருக்கும் திருச்செல்வம், குறும்படங்கள், கருத்து உள்ள காணொளிகள் மற்றும் பிரபலங்கள் நேர்காணல் என அடுத்தடுத்து வீடியோக்களை பதிவிட உள்ளாராம். இதனை மகிழ்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்