தமிழ் சினிமாவில் உச்சத்தில் அமர்ந்து இருக்கும் நடிகர் விஜய். இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து உள்ளார். இவருடன் நடிகை சினேகா, மீனாட்சி சௌத்திரி, மோகன் , பிரசாந்த் , பிரபுதேவா என பலரும் நடித்து உள்ளனர். ஏஜிஎஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற 5ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் விஜயின் இப்படத்தை கொண்டாட காத்து உள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு இசைவெளியீட்டு விழா இல்லாதது ரசிகர்களை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்றே சொல்லலாம்.
தற்போது இப்படத்தின் கதையின் மையக்கரு குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டியில் தெரிவித்து உள்ளார். அதில், RAW அமைப்புடன் இணைந்து வேலை செய்யும் குரூப் SPECIAL ANTI TERRORIST SQUAD. அவர்கள் ஒரு காலத்தில் செய்த விஷயம் தற்போது பிரச்னையாக வந்து அவங்க முன்னாடி நிற்கிறது. அதை எப்படி செய்யுறாங்க என்பது தான் கதை என கூறி உள்ளார்.