தனது மகளின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்த செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர்.!

வெளியிட்டது

நடிகை திவ்யா ஸ்ரீதர் தற்போது தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக தனது ரசிகர்களுக்கு காட்டி instagram பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் திவ்யா ஸ்ரீதர். ஏற்கனவே சில கன்னட சீரியல்களை நடித்து வந்த அவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகராசி என்கிற சீரியலின் மூலமாக தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானார். பின்னர் கேளடி கண்மணி என்கிற தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கும் உடன் நடித்துக் கொண்டிருந்த அர்னவுக்கும் காதல் மலர்ந்தது.

தனது மகளின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்த செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர்.! 1

இருவரும் கோவிலில் வைத்து எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் அர்னவ் மற்றும் திவ்யாவின் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது. செல்லம்மா சீரியலில் உடன் நடிக்கும் நடிகையுடன் அர்னவ் நெருக்கமாக வாழ்ந்து வருவதாகவும், ஒரே வீட்டில் அந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு வந்து தன்னுடன் குடும்பம் நடத்தி வருவதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார் திவ்யா. மேலும் கர்ப்பமாக இருக்கும் தன் வயிற்றில் எட்டி உதைத்ததாகவும் அர்னவ் மீது புகார் அளித்திருந்தார்.

இதனால் நடிகர் அர்னவ் கைது செய்யப்பட்ட சில காலம் சிறையில் இருந்தார். ஜாமினில் அவர் தற்போது விடுதலை ஆகியிருக்கிறார். இந்துவாக இருக்கும் தன்னை அர்னவ் முஸ்லிமாக மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டு விட்டார் என்றும், திருமணமான செய்தியை அவர் தனது வீட்டில் இருந்து மறைத்ததாகவும், மேலும் தான் பகிர்ந்த திருமண புகைப்படங்களையும் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்குமாறும் தன்னை தொடர்ந்து அர்னவ் வற்புறுத்தியதாக திவ்யா பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்.

மேலும் செல்லம்மா சீரியல் நடிகை அன்ஜிதாவும் அர்னவும் காதலித்து வருவதால் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் தற்போது இருவரும் பிரிந்து வாழும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. திவ்யாவிற்கு உடன் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் இணைந்து வளைகாப்பும் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதே தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக அறிவித்திருந்தார் திவ்யா. மேலும் குழந்தையின் புகைப்படம் சரியாக தெரியாதபடி புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார் இதை பார்த்த பலரும் அருணா பார்க்க வேண்டும் என்பதற்காக இப்படி பகிர்ந்து இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

தற்போது முகம் நன்றாக தெரியும்படி அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தன் மகளுக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்த அவர், குழந்தைகள் கடவுளின் கையில் இருந்து வீசப்பட்ட நட்சத்திர தூசிகள், நட்சத்திரம் பிறந்ததால் அந்த பிறப்பின் வேதனையை அறிந்த அதிர்ஷ்டசாலி நான் என்று புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்த பலரும் குழந்தை உங்களைப் போலவே இருக்கிறார் என்று சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்