Categories: சினிமா

நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு! ஐசரி கணேஷ்!!

வெளியிட்டது
நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு! ஐசரி கணேஷ்!! 1

நாடு முழுவதும் தீபாவளி சீசன் தொடங்கி விட்டது. இதனை முன்னிட்டு அனைவரும் இப்போதே பட்டாசு ஆர்டர் செய்யவும், வாங்கவும் ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில், நடிகர் சங்க உறுப்பினரும், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடு வரும், தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர்களாக உள்ள 2500 பேருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியுள்ளார். அதில், வேட்டி, சேலை, இனிப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில், விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டனர். இதில், பல குளறுபடிகள் ஏற்படவே விஷால் அணியினர் நீதிமன்றத்தின் மூலம் பாதுகாப்பு கோரினர். தேர்தல் நடைபெறும் இடமும் மாற்றியமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.

ஆனால், தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 24 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம்.
அதனால் தான், தற்போது வழக்கு விசாரணையில் இருப்பதால், சங்க உறுப்பினர்கள் கவலையில் இருந்தனர். இந்த நிலையில், தான் ஐசரி கணேஷ் 2500 பேருக்கு பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்