Categories: சமூகம்

புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை! அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போன்! மாநில அரசு முடிவு!!

வெளியிட்டது
புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை! அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போன்! மாநில அரசு முடிவு!! 1

தமிழகத்தை போல புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாளான 28 ஆம் தேதி திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9ம் தேதி வேலை நாள் என்றும் அறிவித்து உள்ளது. அதே நேரம், பி மற்றும் சி குரூப் ஊழியர்களுக்கு ரூ. 6,908 தீபாவளி போனஸாக அளிக்கப்படும் என்றும் புதுச்சேரி அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.1,184 தீபாவளி போனஸாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு பிறப்பித்துள்ள அரசாணை:தீபாவளி பண்டிகையான வருகிற 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தங்களது சொந்த ஊருக்குச் சென்று மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக 28ம் தேதி திங்கள்கிழமை அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பலதரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தது.

இந்த கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாள் 28ம் தேதி தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்தும், அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9ம் தேதி(சனிக்கிழமை) பணி நாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்பட்டது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்