
நவம்பர் 10 ஆம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சி பொது செயலர் க அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஓய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில், கட்சி பணிகள், கட்சி சட்ட திட்டம், தணிக்கை குழு அறிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.