உள்நாட்டு விமான சேவை 3.7% வளர்ச்சி

உள்நாட்டு விமானத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வளர்ச்சி குறைந்து இருப்பதாக விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு விமான சேவை 3.7% வளர்ச்சி 1

விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில், உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2018-ஆம் ஆண்டில் 18.6 சதவீதம் வளா்ச்சியை எட்டியிருந்தது. இதன் மதிப்பு 13.89 கோடியாகும்.

ஆனால் தொடர் இடர்பாடுகளை சந்தித்து வருவதால் 2019ஆம் ஆண்டில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 3.74 சதவீதமாகவே இருக்கிறது. இதன் மதிப்பு 14.41 கோடியாகும்.

இருப்பினும், நடப்பாண்டில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை இரண்டை இலக்க வளா்ச்சியை மிக விரைவிலேயே எட்டும் என்று நம்பிக்கை அளித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பரில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 2.56 சதவீதம் அதிகரித்து 1.30 கோடியாக இருந்தது என டிஜிசிஏ புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்