நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் “டான்”. இந்த்படத்தை புதுமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து SJ சூர்யா, சமுத்திரகனி, மனோபாலா, ஷிவாங்கி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை அள்ளி இருந்தது.

கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் படம் இதுவாகும். டாக்டர் பட வெற்றிக்குப் பின் மீண்டும் பிரியங்கா மோகனுடன் இணைந்து நடிக்க உள்ளார் சிவா. இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயனின் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் அனைத்து பாடல்களும், ட்ரைலரும் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. Youtube video code embed credits: Lyca Productions
படத்தின் ஜலபுலஜங் பாடலின் வீடியோ ப்ரோமோவும், படத்தின் முதல் ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. அதில் கடைசி பெஞ்ச் மாணவன் ப்ரின்சிபல் ஆனா எப்படி இருக்கும்ன்னு நீங்க பாக்க போறீங்க என்று SJ சூர்யா வசனம் பேச, இன்ஜினியரிங் படிக்கிறது எவ்வளவு கஷ்டம்ன்னு சிவா பதிலுக்கு வசனம் பேச மக்களை கவரும் வண்ணம் இந்த ப்ரோமோக்களை வெளியிட்டுள்ளது படக்குழு. நாளை மே 13 படம் வெளியாகவுள்ளது. பல திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..,Watch don movie promo below