காபி குடிப்பதால் விளையாட்டுத் திறன் அதிகரிக்கும்! ஆய்வில் கண்டுபிடிப்பு!!

வெளியிட்டது

காபி குடிப்பதால் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் விளையாட்டுத் திறன் அதிகரிக்க வாய்புகள் உண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுதொடர்பாக லண்டன் கான்வென்ட்ரி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இதன் ஆய்வு முடிவுகள் நியூட்ரியண்ட்ஸ் என்னும் ஆய்விதழில் வெளியாகி உள்ளது.அதன்படி, ”19 ஆண்களும் 19 பெண்களும் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.அவர்கள் அனைவரும் சைக்கிள் ஓட்டுமாறு பணிக்கப்பட்டனர். அவர்களுக்கு காபி அல்லது சத்து மாத்திரை கரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட வெறும் தண்ணீர் ஆகியவை கொடுக்கப்பட்டன. ஒரு சிலருக்கு எதுவுமே அளிக்கப்படவில்லை.

காபி குடிப்பதால் விளையாட்டுத் திறன் அதிகரிக்கும்! ஆய்வில் கண்டுபிடிப்பு!! 1

5 கி.மீ. சைக்கிளிங் செல்லும்போது காபி குடித்த ஆண்கள் மற்றும் பெண்களின் செயல்திறன், மற்ற இரண்டு வகையினரைக் காட்டிலும் முறையே 9 நொடிகள் மற்றும் 6 நொடிகள் அதிகமாக இருந்தது. தண்ணீர் குடித்தவர்களுக்கும் எதுவுமே உட்கொள்ளாதவர்களுக்கும் இடையேயான செயல்திறனில் எந்த வேறுபாடும் இல்லை.இதற்கு காபியில் உள்ள காஃபின் என்ற மூலப்பொருளே காரணம். தற்போது வரை ஆராய்ச்சியாளர்கள் நீரற்ற காஃபின் குறித்தே ஆராய்ச்சி செய்து, அதன் தீமைகளைப் பட்டியலிட்டுள்ளனர்.ஆனால், காபி உட்கொள்ளும்போது நேர்மறையாகத் தூண்டப்படும் உடலின் செயல்முறை குறித்து புதிய முடிவுகளை இந்த ஆய்வு அளித்துள்ளது”.இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்