“என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே என கர்ச்சித்த தன்னிகரில்லா தலைவர் திரு.எம்.ஜி.ஆர்”!! மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின் மக்களுக்காக எடுக்கப்பட்ட அறிய வீடியோ பதிவு!!

வெளியிட்டது

"என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே என கர்ச்சித்த தன்னிகரில்லா தலைவர் திரு.எம்.ஜி.ஆர்"!! மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின் மக்களுக்காக எடுக்கப்பட்ட அறிய வீடியோ பதிவு!! 1

“மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்” என டி.எம்.சௌந்தராஜன் குரலில் இன்றும் டி கடைகளில் ஒளிக்கும் இந்த பாடலை கேட்டால் மக்களுக்கு ஞாபகம் வருவது அந்த படமோ, பாடியவரோ இல்லை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் திரு.எம்.ஜி.ஆர் மட்டுமே. எம்.ஜி.ஆர் இந்த பெயருக்கு தமிழகத்தில் 1960களுக்கு பிறகு அறிமுகம் தேவையில்லை. திரையில் நாயகன், நேரில் மக்கள் தலைவன் என வாழ்ந்துக்கட்டிய தலைவர் அவர். உருவம் மறைந்து கிட்டத்தட்ட அரைநூற்றாண்டை நெருங்கிய போதிலும் இன்றும் மக்கள் இவருடைய பெயரை உள்ளத்தில் ஆழமாக பதிந்து வைத்துள்ளனர்.

1936ஆம் ஆண்டு வெளியான “சதி லீலாவதி” படத்தில் அறிமுகமாகிருந்தாலும் இவருடைய முதல் வெற்றி 1954ஆம் ஆண்டு வெளியான “மலைக்கள்ளன்” படம் தான். எம்.ஜி.ஆர்ரை பற்றி பேசும் போது யாராலும் கலைஞர் கருணாநிதி பற்றி பேசாமல் இருக்க முடியாது. 1950களில் வெற்றி பெற துவங்கிய எம்.ஜி.ஆர் படங்களுக்கு பெருமபாலும் கதை, வசனம் எழுதியவர் கலைஞரே. “மலைக்கள்ளன்” படம் முதல் அடுத்தடுத்து எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெற துவங்கின. “அலிபாபாவும் 40 திருடர்களும்” படம் தென்னிந்தியாவில் எடுக்கப்பட்ட முழு நீள கலர் படம். படம் மாபெரும் வெற்றி.  தொடர்ந்து 130 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இப்பொது படங்களின் காலேக்ஷன் பற்றி தயாரிப்பாளருக்கு கூறுவது போல், அப்போதெல்லாம் எவ்வளவு நாட்கள் படங்கள் ஓடியது என்பதை வைத்தே முடிவு செய்வார்கள் படம் எவ்வளவு பெரிய வெற்றியென்பது. இவரின் படங்கள் பெரும்பாலும் 200 நாட்களை தாண்டி பல திரையரங்கில் ஓடியது. மிக பெரிய வெற்றியை பதிவு செய்த “உலகம் சுற்றும் வாலிபன்” படம் அன்றைய படஙக்ளின் பல சாதனைகளை முறியடித்து மிக பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெற்றன.

அரசியலில் அண்ணாவின் கருத்துக்கள் பிடித்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்தவர் அந்த கட்சி முதல் முறையாக 1967ஆம் ஆண்டு ஆட்சி அமைத்ததால் மிக பெரிய பங்கினை ஆற்றியவர். தமிழகத்தில் முதல் முறை காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி ஆட்சியை பிடித்த தி.மு.கவின் கருத்துக்களை தன்னுடைய படங்களின் மூலம் மக்களிடம் உரக்க கூறியவர் எம்.ஜி.ஆர். அண்ணாவின் மறைவு பிறகு, 3 ஆண்டுகளில் 1972ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் அந்த கட்சியில் இருந்து விலகி, அனகாபுத்தூர் ராமலிங்கம் துவங்கிய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து, பின்னர் அதன் தலைவராக மாறி, 1977இல் ஆட்சியை பிடித்தார்.

நடிகர் ஒருவர் கட்சி ஆரம்பித்து ஆட்சியை அமைத்த முதல் நடிகர் எம்.ஜி.ஆர்ரே. இவரை பின்பற்றிய ஆந்திராவின் முன்னாள் முதல்வர் திரு.என்.டி.ஆர்ரும் அரசியலில் ஆளுமை செலுத்தினார். 1977 முதல் தான் இறக்கும்  வரை 1987 வரை முதல்வராகவே இருந்து மக்களுக்கு பணியாற்றிவர் மக்கள் திலகம். மக்கள் இன்றளவும் நினைவில் வைத்து கொள்ளும் பல் அறிய திட்டங்களை தன்னுடைய ஆட்சி காலத்தில் செய்து காட்டியவர் எம்.ஜி.ஆர். 1967இல் ஒரு படப்பிடிப்பின் போது, திரு.எம்.ஆர்.ராதா சுட்டதில் இவருடைய தூண்டையில் பாய்ந்து குண்டு, கடைசி காலம் வரை அங்கேயே இருந்து, அவருடைய குரல் வளத்தை குறைத்து.

இருப்பினும் மக்கள் மத்தியில் செல்வாக்கு அவருக்கு குறையவில்லை.  உடல் நிலை மிகவும் குன்றிய இவர், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிறகு அப்போது மக்களிடம் உள்ள குழப்பத்தை விளக்க, வீடியோ பதிவு எடுக்கப்பட்டது. அது இப்போது மிகவும் வைரலாகி வருகிறது. அரசியலில் மாற்றுக்கருத்துக்கள் இருந்த போதும் எம்.ஜி.ஆர்ரும் கலைஞர் கருணாநிதியும் கடைசி காலம் வரை நல்ல நட்பை கொண்டிருந்தினர். கட்சியில் இருவருக்கும் கொஞ்சம் புகைச்சல் வந்த பொது, காரில் சென்ற போது, உடன் இருந்தவர்கள் கலைஞரை பற்றி தன்னிடம் தவறாக பேசியதால், நாடு இரவில் அவர்களை கீழிறக்கி விட்டு போயுள்ளார் எம்.ஜி.ஆர். அதே போல கடவுள் நம்பிக்கை இல்லாத கலைஞர் எம்.ஜி.ஆர் மருத்துவனையில் இருந்த போது வெளியிட்ட கட்டுரையில், “நம்பிக்கை இல்லாத போதும், மக்களின் பிராத்தனை பலன் பெற வேண்டும், மீண்டும் வா நண்பா” என கலைஞர் வெளியிட்ட அறிக்கை இருவரும் ஒருவரிடத்தில் மற்றொருவர் கொண்ட நட்பின் காட்டியது. இருப்பினும் அப்போது எம்.ஜி.ஆர் கட்சியில் இருந்து விலகி இருந்தார். கடைசி காலங்களில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ நீங்களும் பார்க்க…..

Video Courtesy – Hary Sk Official.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்