Categories: சினிமா

ஆக்ஷன் ஹீரோவாக மாறி பட்டையை கிளப்பும் துல்கர் சல்மான்.! கிங் ஆஃப் கோதா டீசர் இதோ..!

வெளியிட்டது

நடிகர் துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, நடிகர் பிரசன்னா, டான்சிங் ரோஸ் சபீர், அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் தான் துல்கர் சல்மான். இவர் 2012ம் ஆண்டு வெளியான செகண்ட் ஷோ என்ற படத்தின் மூலமாக மலையாள திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார். அடுத்த படம் உஸ்தாத் ஹோட்டல் மிக பெரிய வெற்றியை கொடுக்கவே அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக்ஷன் ஹீரோவாக மாறி பட்டையை கிளப்பும் துல்கர் சல்மான்.! கிங் ஆஃப் கோதா டீசர் இதோ..! 1

தமிழில் வாயை மூடி பேசவும் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார் துல்கர். பின்னர் பெங்களூரு டேஸ், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹே சினாமிகா, சீதா ராமம் போன்ற படங்களில் நடித்து பலரின் மனங்களை கொள்ளை கொண்டார். தற்போது அவர் ஆக்ஷன் படமான கிங் ஆஃப் கோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் ஒரு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்து முடித்துள்ள கிங் ஆஃப் கோதா திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை அபிலாஷ் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என மொத்தம் 5 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த டீஸர் வெளியான சில நிமிடங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, டான்சிங் ரோஸ் சபீர், நடிகர் பிரசன்னா, அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீங்களும் தற்போது வெளியாகியுள்ள டீஸர் வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..! 

Youtube Video Embed Code Credits: Sony Music South

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்