Categories: சினிமா

நாளை மறுநாள் வெளியாகியுள்ளது தர்பார் ட்ரைலர்! சும்மா கிழிய போது வீவ்ஸ்!!

வெளியிட்டது

ரஜினிகாந்த் நடிப்பில் 167-வது படமாக ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘தர்பார்’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் நடந்து முடிந்துள்ளது.

கதாநாயகியாக நயன்தாரா நடித்துவருகிறார். பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன், ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், ஸ்ரீமன் போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருக்கிறார். தாதாக்களுக்கும் போலீசுக்கும் நடக்கும் மோதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். பெரும்பகுதி படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்துள்ளது. படத்தில் அனிருத் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘சும்மா கிழி நான்தாண்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு’ என்ற அரசியல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தர்பார் படம் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.

இதனையடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை மறுநாள் மாலை 6.30 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்