இந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான லடாக் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

நிலநடுக்கம் தொடர்பாக தேசிய புவியியல் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், லடாக் பகுதி அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சில வினாடிகள் பூமி குழுங்கி உள்ளன. கட்டிடங்கள் திடீரென குழுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்று அச்சமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாகவோ, உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது.