Categories: சமூகம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு!!

வெளியிட்டது
மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு!! 1

மகாராஷ்டிராவின் பல்ஹார் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலம் பல்ஹார் பகுதியில் இன்று காலை 5.22 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.8 ஆக பதிவானதாக தகவல் கிடைத்தது.

ஏற்கனவே கடந்த நவ. 20ம் தேதி இதேபகுதியில் 3.5 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக பல்ஹார் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, கடந்த 2018ம் ஆண்டில் பல்ஹார் பகுதியில் நிலம் நடுக்கம் ஏற்பட்டதாக தானே மாநகராட்சி நிர்வாக பேரிடர் பிரிவும் தெரிவித்தது. தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்