Categories: உலகம்

நியுசிலாந்து நாட்டில் திடீரென நிலநடுக்கம்! 5.9 ஆக ரிக்டர் அளவில் பதிவு!!

வெளியிட்டது
நியுசிலாந்து நாட்டில் திடீரென நிலநடுக்கம்! 5.9 ஆக ரிக்டர் அளவில் பதிவு!! 1

நியுசிலாந்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் ரவுல் தீவில் இரவு 1.56 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி இருந்தது.

80 கி.மீ தொலைவில் தீவின் தென் மேற்கு திசையிலிருந்து சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்தாதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் அதிர்வு பெருமளவு ஏற்பட்டு கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்