Categories: கல்வி

சாதி, மத ரீதியில் அணிதிரடுவதை தடுக்க கல்வித்துறை உத்தரவு!

சாதியம் மற்றும் மதவாதம் தொடர்பான இயக்கங்களால் மாணவர்கள் அணிதிரட்டப்படுவதை தடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அலுவலகத்திற்கும் பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

இந்து மாணவர் முன்னணி, இந்து இளைஞர் முன்னணி மற்றும் இன்ன பிற இயக்கங்களின் பெயரில் மாணவர்கள் அணி திரட்டப்படுகிறார்கள் என்று பள்ளி கல்வி துறையினருக்கு புகார் வந்ததை அடுத்து இந்த உத்தரவை பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் வெங்கடேசன்  பிறப்பித்துள்ளார்.

சாதி, மத ரீதியில் அணிதிரடுவதை தடுக்க கல்வித்துறை உத்தரவு! 1

அதில், மாணவர்களை மத ரீதியாகவும், சாதிய சித்தாந்த ரீதியாகவும் அணி திரட்டுவது, கல்வி நிலைய நிர்வாக விதிமுறைகளுக்கு எதிரானது என்று பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்து மாணவ, மாணவிகள் காதல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? என அணி திரட்டப்படும் மாணவர் குழு கண்காணிப்பதாகவும், லவ் ஜிகாத் என்ற பெயரில் மத கலப்பு சீர் திருத்த திருமணத்தை தடுக்க இவர்கள் முயற்சிப்பதாகவும் புகார் வந்துள்ளது. எனவே, இந்த ஒருங்கிணைப்பு குழுக்கள் குறித்து விசாணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டுமெனவும், இந்த செயல் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்