நிறுத்துங்க..! பார்த்தி – காவ்யா திருமணத்தில் வந்து கத்திய ஜீவா.! பரபரப்பான திருப்பங்களுடன் ஈரமான ரோஜாவே

வெளியிட்டது

ஈரமான ரோஜாவே சீரியலில் தற்போது பார்த்திக்கும் காவியாவிற்கும் இடையே திருமணம் நடக்க இருக்கும் நிலையில் அதை நிறுத்த சொல்லி ஜீவா கூறுவது போன்ற ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஈரமான ரோஜாவே தொடர் சற்று வித்தியாசமானது. இந்த தொடரில் ஜீவாவும் காவியாவும் காதலித்து வருகின்றனர். ஜீவாவின் அண்ணன் பார்த்திக்கு காவியாவின் அக்கா பிரியாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் பார்த்தியின் அத்தை தனது மகளை திருமணம் செய்து வைக்கும் பொருட்டு பிரியாவை திருமணத்தன்று ரவுடிகளை வைத்து கடத்தி விடுகிறார். இதனால் பார்த்திக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நிலையில் பிரியாவின் தங்கையான காவியாவை திருமணம் செய்து வைத்து விடுவார்கள். காவியா தனது தம்பி ஜீவாவை காதலித்து வருவதை அறியாத பார்த்தியும் காவியாவை திருமணம் செய்து கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுத்துங்க..! பார்த்தி - காவ்யா திருமணத்தில் வந்து கத்திய ஜீவா.! பரபரப்பான திருப்பங்களுடன் ஈரமான ரோஜாவே 1
இதனால் காவியா ஆரம்பம் முதலே பார்த்தியுடன் சுமுகமான வாழ்க்கையை வாழவில்லை. மேலும் அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பிரியா கடைசி நிமிடத்தில் ஜீவாவால் கண்டுபிடிக்கப்பட்டதால், பிரியாவை ஜீவா திருமணம் செய்து கொள்கிறார். ஜோடிகள் மாறிப்போன போதிலும் ஜீவா பிரியா தம்பதிகள் ஓரளவிற்கு இணைந்திருந்தனர். ஆனால் பார்த்தியும் காவியாவும் ஆரம்பம் முதலே சரியில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பார்த்தியின் தாயாரின் சதியால் காவியா வீட்டிலிருந்து வெளியேறுகிறார். பார்த்தியை விகாரத்து செய்ய காவியா முடிவெடுக்கிறார். இந்த சூழலை பயன் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பார்த்தியின் அத்தை மீண்டும் தனது மகளை பார்த்திக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடத்தினார். ஆனால் அதை எல்லாம் முறியடித்து தற்போது பார்த்தியும் காவியாவும் மீண்டும் இணைந்து இருக்கின்றனர். அவர்களுக்கு மீண்டும் ஒரு திருமணம் செய்து வைக்க வீட்டில் உள்ள அனைவரும் முடிவெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மெஹந்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது அங்கே வரும் ஜீவா நிறுத்துங்க என்று கத்துகிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க, அவர் காமெடியாக எனது அண்ணன் தானே மாப்பிள்ளை அவரில்லாமல் இந்த மெஹந்தி பங்க்ஷன் என்று சொல்லி பார்த்தியை அழைக்கிறார். மேலும் பார்த்தியும் வந்து என் மனைவிக்கு நான் தான் மெஹந்தி போடுவேன் என்று சொல்லி அவர் கைகளைப் பிடித்து மெஹந்தி போட்டு விடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்