ஈரமான ரோஜாவே சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் காவியா மற்றும் பார்த்திக்கு நடக்க இருந்த திருமணம் தற்போது தடைப்பட்டு இருக்கிறது. பார்த்தியை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் தற்போது காவ்யா மற்றும் பார்த்திக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த சீரியலின் ஆரம்ப கதை குறித்து பார்த்தோம் என்றால் தம்பி காதலித்த காவியாவை அண்ணன் பார்த்தி திருமணம் செய்து கொள்கிறார். அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணை தம்பி ஜீவா திருமணம் செய்து கொள்கிறார். ஆரம்பத்தில் இந்த கதை பலராலும் விமர்சிக்கப்பட்டது. திருமணத்தன்று பெண் காணாமல் போய்விட்டால் அவரது தங்கையை இப்படி வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைப்பீர்களா? என்று கண்டன குரல்களும் எழுந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல இந்த கதையை பலரும் விரும்பிப் பார்க்கத் தொடங்கினர் குறிப்பாக வேண்டா வெறுப்பாக திருமண வாழ்க்கை தொடங்கிய காவியா பார்த்தி ஜோடிகள் செய்யும் க்யூட்டான ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே பலரும் இந்த சீரியலை விரும்பி பார்க்கத் தொடங்கியிருந்தனர். ஒரு கட்டத்தில் காவியாவும் பார்த்தியும் பிரிந்து விடுவார்கள் என்று எண்ணியிருந்த நிலையில் கதையில் திடீர் திருப்பமாக காவியா பார்தியை ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு பார்த்தி மீது காதல் ஏற்பட்டு இருவருக்கும் மீண்டும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். முதலில் நடந்த திருமணம் அவசரகதியில் நடந்து விட்டது எனவே இந்த முறை திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்று குடும்பத்தினர் திட்டமிட அதன்படியே திருமண காட்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் திருமணம் நின்று தடைபட்டுள்ளது.
பார்த்தியின் அத்தை தனது மகள் ரம்யாவை பார்த்திக்கு திருமணம் செய்து வைக்கும் நோக்கில் திருமண ஏற்பாடுகளை நடத்தி வந்தார். இந்த நிலையில் ரம்யா உடன் திருமணம் நடைபெறாததால் ரம்யாவின் தாயார் பார்த்தியை கைது செய்யுமாறு போலீஸை அணுகியிருக்கிறார். தற்போது திருமண மண்டபத்திற்கு வரும் போலீசார் பார்த்தியை தரதரவென்று சட்டையை பிடித்து இழுத்துச் செல்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television