நம்ம குழந்தைங்க கலைஞ்சு போய்டுச்சு பார்த்தி.! கதறி அழும் காவ்யா.! மனம் நொறுங்கிய பார்த்தி.!

வெளியிட்டது

ஈரமான ரோஜாவே தொடரில் தற்போது காவியா தன்னுடைய குழந்தைகள் இரண்டும் கலைந்து விட்டதாக வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறி உடைந்து போய் அழுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த செய்தியை கேட்ட பார்த்திபன் உட்பட அனைவரும் உடைந்து போய் இருக்கின்றனர். நெகிழ்ச்சியான அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியின் ஈரமான ரோஜாவே தொடரில் தற்போது பார்த்திபன் மற்றும் காவியா ஜோடிக்கு இரட்டை குழந்தைகள் உருவாகியிருந்தது. ஆனால் ஐஏஎஸ் படிக்கும் கனவில் இருக்கும் காவியா கர்ப்பமான வயிற்றுடன் பயணம் செய்ததால் அந்த இரண்டு குழந்தைகளும் கலைந்து விட்டது. இதை வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் மருத்துவமனைக்குச் சென்று குழந்தைகளை கலைத்து விட்டார் காவியா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நம்ம குழந்தைங்க கலைஞ்சு போய்டுச்சு பார்த்தி.! கதறி அழும் காவ்யா.! மனம் நொறுங்கிய பார்த்தி.! 1

பின்னர் வீட்டிற்கு வரும் அவர் தனது கணவர் மாமனார் மாமியார் என யாரிடமும் சொல்லாமல் இந்த விஷயத்தை மறைத்து வைக்கிறார். இது தெரியாமல் காவியாவின் கணவர் பார்த்திபன் தனக்கு குழந்தைகள் நன்றாக பிறக்க வேண்டும் என்பதற்காக கோவில்களில் நேர்த்திக்கடன் செலுத்துகிறார். மேலும் பார்த்திபனின் தாயாரும் தனது மருமகளுக்காக கர்ப்பிணி பெண்கள் மற்றும் சுமங்கலிகளை அழைத்து வந்து அவர் கையால் தங்க நாணயமும் கொடுக்கிறார். இதையெல்லாம் காவியாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, விரைவில் உண்மையை கூறி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பார்த்திபன் வீட்டில் உள்ள அனைவரையும் ஹாலில் அமர வைத்திருக்கிறார். அப்போது அங்கு வரும் அனைவரிடமும் தனக்கு பிறக்க இருக்கும் இரட்டை குழந்தைகளுக்கு பெயரை தேர்வு செய்யவும் என வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறுகிறார்.

வீட்டில் உள்ள அனைவரும் சீட்டில் பெயரை எழுதுகின்றனர். அதில் பார்த்தி ஒரு பெயரை எடுக்கிறார், வெற்றிச்செல்வன் என்று வருகிறது. காவியா ஒரு பெயரை எடுக்கிறார். அதில் ஆதிரை என வருகிறது. இதை பார்த்த பின் மனம் உடைந்து போன காவியா உண்மையை வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லிவிடுகிறார். தன் வயிற்றில் இருந்த குழந்தைகள் இரண்டும் இறந்துவிட்டதாக அவர் தற்போது கூறி உடைந்து போய் அழுகிறார். இதனால் பார்த்திபன் மனம் உடைந்து போய் அமர்ந்திருக்கிறார். வீட்டில் உள்ள அனைவருக்கும் இது தலையில் இடியாக விழுந்திருக்கிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்