துரோகம் பண்ணது நீங்க.! மாமியாரை வெளுத்து வாங்கிய காவ்யா.! தரமான ப்ரோமோ.!

வெளியிட்டது

தொலைக்காட்சிகளில் நல்ல கதை அம்சத்துடன் கூடிய தொடர்களை ஒளிபரப்புவதில் முன்னிலை வகிப்பது விஜய் டிவி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கைதேர்ந்ததாக இருக்கிறது. இதில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் அனைத்திற்கும் பல லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர். தொடர்கள் மட்டுமல்லாமல் ரியாலிட்டி ஷோக்கள், காமெடி ஷோக்கள், பிக்பாஸ், குக் வித் கோமாளி என்று இந்த சேனலில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அப்படி ஒரு முக்கியமான தொடர் தான் ஈரமான ரோஜாவே. இது சீசன் 1 கொடுத்த மிகப்பெரிய வெற்றியால், தற்போது சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நடிகர் சித்தார்த் மற்றும் கேபி இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

துரோகம் பண்ணது நீங்க.! மாமியாரை வெளுத்து வாங்கிய காவ்யா.! தரமான ப்ரோமோ.! 1

சித்தார்த்-பார்த்திபன் என்ற கதாபாத்திரத்திலும், கேபி-காவியா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள். இவர்கள் மட்டுமல்லாமல் திரவியம் – ஜீவா கதாபாத்திரத்திலும், சுவாதி – பிரியா கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இந்த கதையைப் பற்றி பார்த்தோம் என்றால், பார்த்திபன் ஜீவா இருவரும் அண்ணன் தம்பிகள். பிரியா மற்றும் காவியா அக்கா தங்கைகள். இதில் பார்த்திபனுக்கு பிரியாவை திருமணம் செய்ய இருந்தது, இதனால் பார்த்தியின் தம்பி ஜீவாவும், பிரியாவின் தங்கை காவியாவும் காதலித்து வந்தனர். ஆனால் திருமணத்தன்று பிரியாவை கடத்தி விட்டதால், பார்த்திபனுக்கு தம்பியின் காதலியான காவியாவை திருமணம் செய்து வைத்துவிட்டனர். இதனால் வேறு வழியில்லாமல் அண்ணனுக்கு பேசி முடித்த பிரியாவை தம்பி ஜீவா திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இந்த தொடர் பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. ஒரு திருமணத்திற்கு பார்த்தி மற்றும் காவ்யா செல்கின்றனர். அங்கு பெண் மாப்பிள்ளையிடம் தான் இதற்கு முன்பு ஒரு பையனை காதலித்ததாக கூறுகிறார். அதனால் கோபமாகி மாப்பிள்ளை எழுந்து செல்கிறார். அவரிடம் செல்லும் பார்த்தி அந்த பெண் நினைத்து இருந்தால் உண்மையை உன்னிடம் மறைத்து இருக்க முடியும். இது போல் ஒரு பெண் கிடைக்காது என்று சொல்லி சமாதானப்படுத்தி திருமணம் செய்து வைக்கிறார். இதை பார்த்த காவியாவின் மாமியார் காவியாவை அழைத்து நீயும் இது போல திருமணத்திற்கு முன்பே உண்மையை கூறி இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இதற்கு பதில் அளித்த காவியா நானா உங்களிடம் வந்து பார்த்தியை திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்டேன் என்று பதிலடி கொடுத்து உள்ளார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below Video.! 

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்