காவ்யா இருக்கானால தான் என்கிட்ட இப்படி நடந்துக்கிற?? ஜீவாவை கேள்விகளால் துளைக்கும் ப்ரியா.!

வெளியிட்டது

ஈரமான ரோஜாவே தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிரியா தற்போது ஜீவாவை தனி குடித்தனம் செல்லுமாறு அழைக்கிறார். இங்கு காவியாவுடன் இருந்தால் காவியா நினைப்பிலேயே இருப்பதால் தன்னிடம் பாசம் காட்டுவதில்லை என்று சொல்லி ஜீவாவை தனிக் குடித்தனம் செல்வதற்காக அழைக்கிறார் பிரியா. ஈரமான ரோஜாவே பாகம் 2 எனும் கதை குறித்து பார்த்தோமென்றால் அண்ணன் தம்பிகளாக இருக்கும் பார்த்திபன் மற்றும் ஜீவா ஒரு மிகப்பெரிய தொழில் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். அதில் அண்ணன் பார்த்திபனுக்கு பிரியா என்கிற பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு நடைபெறுகிறது. ஆனால் திருமணத்தன்று பிரியா கடத்தப்பட்டு விடுவதால் பிரியாவின் தங்கை காவியாவை பார்த்திபனுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். இதில் திருப்பம் என்னவென்றால் பார்த்திபனின் தம்பி ஜீவாவைத்தான் காவியா காதலித்து வருவார். ஆனால் அக்கா கடத்தப்பட்டு விட்டதால் வேறு வழியில்லாமல் அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பார்த்தியை திருமணம் செய்து கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காவ்யா இருக்கானால தான் என்கிட்ட இப்படி நடந்துக்கிற?? ஜீவாவை கேள்விகளால் துளைக்கும் ப்ரியா.! 1

இந்த திருமணத்தில் காவியாவிற்கு சிறிதும் உடன்பாடு இல்லை. இருப்பினும் குடும்பத்திற்காக பார்த்திபனை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் கடைசி நிமிடத்தில் பிரியா கிடைத்து விடுவதால் அவரை தம்பி ஜீவாவிற்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். எத்தனை நாட்களாக ஜீவா – காவ்யா காதிலித்து வந்த விஷயம் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஜீவாவும் காவியாவும் காதலித்து வந்த விஷயம் தெரியவந்துள்ளது. கடைசி நிமிடத்தில் ஜோடிகள் மாறிப் போனதால் ஏற்பட்ட குழப்பம் தற்போது வரை நீடித்து வருகிறது. பார்த்திபனும் காவியாவும் ஒரு கட்டத்தில் இணைந்து வாழத் தொடங்கி இருக்கின்றனர். அதற்கு சாட்சியாக தற்போது பார்த்திபனின் வாரிசை காவியா தனது வயிற்றில் சுமக்கிறார். ஆனால் மற்றொரு ஜோடிகளாக இருக்கும் ஜீவா பிரியா இன்னும் சேராமலேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஜீவாவும் காவியாவும் அடிக்கடி பேசிக் கொள்வது பிரியாவிற்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வில்லி தேவி பிரியாவின் மனதை மாற்றுகிறார்.

காதலித்த இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருப்பது சரியில்லை, எனவே ஜீவாவை அழைத்துக்கொண்டு தனிக்குடித்தனம் செல்லுமாறு பிரியாவிற்கு துர்போதனைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார் தேவி. தேவியின் சூழ்ச்சிக்கு பலியான பிரியா தற்போது ஜீவாவை தனிக் குடித்தனம் வருமாறு அழைக்கிறார். மேலும் காவியா இருப்பதால் தன்னிடம் காட்ட வேண்டிய அன்பு தனக்கு கிடைக்காமல் போவதாக பிரியா காட்டமான வார்த்தைகளை ஜீவாவிடம் கூறுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்