என் வாழ்க்கைய வாழ விட மாட்டியா? பிரியா காவியாவுக்கு இடையே நடந்த பயங்கர சண்டை.! ப்ரோமோ இதோ

வெளியிட்டது

ஈரமான ரோஜாவே சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பிரியா காவியாவிடம் தனிக்குடித்தனம் செல்ல இருக்கும் செய்தியை கூறுகிறார். அப்போது ப்ரியாவிற்கும் காவியாவிற்கும் சண்டை வருகிறது. யார் என்ன சொன்னாலும் நான் மட்டுமாவது இந்த வீட்டில் இருந்து வெளியேறி தனியாக செல்வேன் என்று பிரியா காவியாவிடம் கோபமாக கூறிக் கொண்டிருக்கிறார். இதனால் அக்கா தங்கை இருவருக்கும் சண்டை எழுந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இரண்டு வருகிறது. அண்ணன் தம்பிகள் அக்கா தங்கைகள் இருவரை திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். திருமணத்தன்று கடைசி நிமிடத்தில் ஜோடிகள் மாறிப்போனதால் ஏற்பட்ட குழப்பம் இன்று வரை நீடித்து வருகிறது. இந்த குழப்பத்திற்கு விடை தேடும் விதமாக பிரியா தனது கணவர் ஜீவாவை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் செல்ல முடிவெடுக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என் வாழ்க்கைய வாழ விட மாட்டியா? பிரியா காவியாவுக்கு இடையே நடந்த பயங்கர சண்டை.! ப்ரோமோ இதோ 1
பார்த்திபன் பிரியாவைத்தான் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. ஆனால் பிரியா கடைசி நிமிடத்தில் கடத்தப்பட்டு விட்டதால் பார்த்திபனுக்கு பிரியாவின் தங்கை காவியாவை திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால் பார்த்திபனின் தம்பியும் காவியாவும் காதலித்து வருகின்றனர். கடைசி நிமிடத்தில் பிரியா கிடைத்து விட்டதால் பார்த்திபனின் தம்பி ஜீவாவிற்கு பிரியாவை திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். வேண்டா வெறுப்பாக நடந்த இந்த திருமணம் தற்போது வரை சர்ச்சைகளுடன் நீடித்து வருகிறது. தம்பி ஜீவாவை காதலித்த போதிலும் அண்ணன் பார்த்திபனை திருமணம் செய்து கொள்ளும் காவியா, தற்போது அவரை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். பார்த்திபனும் காவியாவும் இணைந்து வாழத் தொடங்கி இருக்கின்றனர். காவியா தற்போது பார்த்திபனின் வாரிசை தனது வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறார். ஆனால் மற்ற ஜோடிகளான ஜீவா மற்றும் பிரியா இன்னும் இணைந்து வாழவில்லை.

இந்த நிலையில் ஜீவாவும் காவியாவும் காதலித்து வந்த விஷயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிய வர, தற்போது ஜீவாவை குடும்பத்திலிருந்து பிரித்து தனிக் குடித்தனம் அழைத்துச் செல்ல பிரியா முடிவெடுத்து இருக்கிறார். இதை தற்போது காவியாவிடம் சொல்லிக் கொண்டிருக்க, காவியா நமது மாமனாரும் மாமியாரும் தன்னை மகள்கள் போல நினைக்கிறார்கள், எனவே தனிக் குடித்தனம் செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறுகிறார். ஆனால் நீயும் தனி குடுத்தனம் போக வேண்டாம் என்று சொல்கிறாய், ஜீவாவும் அதைத்தான் சொல்கிறார், என் வாழ்க்கையை நான் வாழ வேண்டாமா? யார் என்ன சொன்னாலும் சரி நான் மட்டுமாவது இந்த வீட்டிலிருந்து வெளியேறி தனியாக செல்வேன் என்று பிரியாவிடம் சண்டை போடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்