பிரியாவுக்கும் காவ்யாவுக்கும் இடையே முற்றும் மோதல்.! காவ்யாவை அசிங்கப்படுத்தும் பிரியா.!

வெளியிட்டது

பிரியா பின்னால் அமர்ந்திருந்தது தெரியாமல் ஜீவா காவியாவை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பான ப்ரியா தற்போது எழுந்து வெளியில் செல்கிறார். இந்த அதிரடியான ப்ரோமோவை ஈரமான ரோஜாவின் சீரியல் குழுவினர் தற்போது வெளியிட்டு இருக்கின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே தொடர் சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்டது. ஜோடிகளை மாற்றி திருமணம் செய்து கொள்ளும் அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் ஒரு பாச போராட்டத்தை மையமாகக் கொண்டு இந்த கதை எடுக்கப்பட்டு வருகிறது. அண்ணன் பார்த்திபன் காவியாவை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் காவியாவும் பார்த்திபனின் தம்பி ஜீவாவும் தான் காதலித்து வருகின்றனர். காவியாவின் அக்காவிற்கு பார்த்திபனை திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் பிரியா காணாமல் போனதால் வேறு வழியில்லாமல் தம்பி காதலித்து வந்த காவியாவை பார்த்தி திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் ஜீவாவும் காவியாவும் காதலித்து வந்த விஷயம் பார்த்திபனுக்கு தெரியாது. ப்ரோமோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரியாவுக்கும் காவ்யாவுக்கும் இடையே முற்றும் மோதல்.! காவ்யாவை அசிங்கப்படுத்தும் பிரியா.! 1

பின்னர் பிரியா மீண்டும் கிடைத்து விட்டதால், அவரை தம்பி ஜீவா திருமணம் செய்து கொள்கிறார். இதனால் குடும்பத்தில் பல குழப்பங்கள் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் ஜீவாவும் காவியாவும் காதலித்து வந்த விஷயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிய வருகிறது. ஆனால் பார்த்திபன் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் தற்போது காவியாவுடன் சேர்ந்து வாழத் தொடங்கி இருக்கிறார். அதற்கு சாட்சியாக காவியா வயிற்றில் ஒரு குழந்தையும் உருவாகி இருக்கிறது. ஆனால் மற்ற ஜோடிகளாக இருக்கும் ஜீவாவும் பிரியாவும் இன்னும் சேர்ந்து வாழ தொடங்கவில்லை. அவர்களுக்குள் எப்போதும் சண்டை ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இதனால் ஜீவாவை தனிக்குடித்தனம் அழைத்துச் செல்ல பிரியா திட்டமிட்டு வருகிறார். இதை ஜீவாவிடம் சொல்லிய போதிலும் இன்னும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறாமலே இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டிருக்கிறது.

அப்போது காவியா பாடல் பாடிக் கொண்டிருக்கிறார். அப்போது பின்னால் பிரியா அமர்ந்திருந்ததை கவனிக்காமல் ஜீவா காவியாவின் பாட்டு திறமை குறித்தும், அவரது நடமை திறமை குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறார். இதை கவனித்த பிரியா கோபத்தில் அமர்ந்திருக்கிறார் அப்போது காவியா வந்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் பிரியாவிடம் வரும்பொழுது அவர் சட்டென்று மூஞ்சியை திருப்பிக் கொண்டு எழுந்து போய்விட்டார். இதனால் பிரியாவிற்கும் காவியாவிற்கும் அடுத்தடுத்து மோதல் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்