பார்த்திபனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் காவ்யா.! நெகிழ்ச்சியான ப்ரோமோ.!

வெளியிட்டது

ஈரமான ரோஜாவே தொடரில் தற்போது காவியா கர்ப்பமாக இருக்கும் செய்தியை மருத்துவர் உறுதி செய்ய அதை பார்த்தியிடம் இருந்து சொல்லாமல் காவியா மறைத்து விடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியின் சீரியல்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. பல சீரியல்கள் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராக இருந்து வருகிறது. அந்த வகையில் ஈரமான ரோஜாவே பாகம் இரண்டு ஒளிபரப்பாகத் தொடங்கிய சில நாட்களிலேயே இல்லத்தரசிகளின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. இதில் பார்த்திபனாக சித்தார்த்தும், காவியாவாக கேப்ரியல்லாவும், ஜீவாவாக திரவியமும், பிரியாவாக சுவாதியும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த இந்த கதை வித்தியாசமான முறையில் ஆரம்பிக்கப்பட்டது. பார்த்திபனும் பிரியாவுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்து வர, பார்த்திபனின் தம்பி ஜீவாவும், பிரியாவின் தங்கை காவியாவும் காதலித்து வருகின்றனர். ஆனால் கடைசி நிமிடத்தில் பிரியா கடத்தப்பட்டு விட்டதால் பார்த்திபனுக்கு காவியாவை திருமணம் செய்து வைக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பார்த்திபனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் காவ்யா.! நெகிழ்ச்சியான ப்ரோமோ.! 1
தம்பியை காதலித்து வரும் காவியா அண்ணனை திருமணம் செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார். அந்த திருமணத்தில் காவியாவுக்கு உடன்பாடு இல்லை. காவியாவும் ஜீவாவும் காதலித்து வந்த விஷயம் பார்த்திபனுக்கு இத்தனை நாட்களாக தெரியவில்லை. தற்போது கதைப்படி ஜீவாவும் காவியாவும் காதலித்த விஷயம் பார்த்திபனுக்கு தெரிந்துவிட்டது. இருந்தபோதிலும் கொஞ்சம் கொஞ்சமாக பார்த்திபன் காவியாவை ஏற்றுக்கொண்டு தற்போது இணைந்து வாழத் தொடங்கி இருக்கிறார். ஆனால் ஜீவாவின் மனைவியான பிரியா ஜீவாவை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது பார்த்திபனின் வாரிசை காவியா வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறார். மருத்துவமனைக்கு செல்லும் காவியா இரண்டு நாட்களாக வாந்தி எடுத்து வருவதாக மருத்துவரிடம் கூறுகிறார். அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறார். இதை கேட்டு மகிழ்ந்து போன காவியா கண் கலங்கி அழுகிறார். பின்னர் வீட்டிற்கு வரும் அவர் குழந்தை புகைப்படம் இருக்கும் காலண்டரையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அதைப் பார்த்த பார்த்திபன் எதற்கு காலண்டரை பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்க, கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்லாமல் மறைக்கிறார் காவ்யா. தன்னை முழுமையாக புரிந்து கொள்ளும் வரை பார்த்தியின் வாரிசு தன் வயிற்றில் வளரும் விஷயத்தை சொல்லப் போவதில்லை என்று முடிவெடுக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப. பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்