ரம்யாவுடன் நிச்சயதார்த்தம் செய்த பார்த்தி.! உடைந்து போய் நிற்கும் காவ்யா.! ஈரமான ரோஜாவே ப்ரோமோ

வெளியிட்டது

ஈரமான ரோஜாவே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பார்த்தி தனது அத்தை மகளான ரம்யாவை நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு வரும் காவ்யா உடைந்து போய் அழுகிறார். இந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியல் சற்று வித்தியாசமானது. இந்த கதை குறித்து பார்த்தோம் என்றால் அண்ணன் பார்த்திக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண் கடைசி நிமிடத்தில் கடத்தப்பட்டு விட்டதால் அந்த பெண்ணின் தங்கை காவியாவை பார்த்திக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். இந்த திருமணத்தில் காவியாவிற்கு சிறிதும் உடன்பாடு இல்லை. ஏனென்றால் அவர் பார்த்தியின் தம்பி ஜீவாவை காதலித்து வருகிறார். தம்பியை காதலித்து விட்டு அண்ணனை எப்படி திருமணம் செய்து கொள்வது என்று அவர் இந்த திருமணத்திற்கு மறுக்கிறார். இருப்பினும் கட்டாயமாக அவருக்கு இந்த திருமணத்தை செய்து வைத்து விடுகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரம்யாவுடன் நிச்சயதார்த்தம் செய்த பார்த்தி.! உடைந்து போய் நிற்கும் காவ்யா.! ஈரமான ரோஜாவே ப்ரோமோ 1

திருமணத்திற்கு பின்னர் பார்த்தியுடன் சுமுகமான வாழ்க்கையை காவியா வாழவே இல்லை. தொடர்ந்து விவாகரத்து கேட்டு பார்த்தியை அவர் மன சங்கடத்திற்கு ஆளாக்கி வந்தார். இருந்தபோதிலும் பார்த்தி எப்படியாவது காவியா மனதை மாற்றி அவருடன் இணைந்து வாழ்வேன் என்று சபதம் போட்டிருந்தார். இருப்பினும் அது கை கூடவே இல்லை. விவாகரத்திற்கு காவியா மனு செய்திருந்த நிலையில் கோர்ட்டில் இன்னும் ஒரு ஆறு மாதங்கள் பார்த்தியுடன் சேர்ந்து வாழ்ந்து பின்பு தான் உங்களுக்கு விவாகரத்து தர முடியும் என்று கூறி நீதிபதி அனுப்பி வைத்துவிட்டார். இதற்கிடையில் பார்த்தியின் அத்தை தேவி எப்படியாவது தனது மகளை பார்த்திக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த திருமணத்தில் பார்த்திக்கு சிறிதும் உடன்பாடு இல்லை என்றாலும் காவ்யாவுக்கு தன்னுடன் வாழ விருப்பம் இல்லை என்பதால் இந்த திருமணத்திற்கு வேண்டா வெறுப்பாக சம்மதம் சொல்கிறார் பார்த்தி.


இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பார்த்திக்கும் ரம்யாவுக்கு திருமணம் நடைபெறுகிறது. அத்தை மகளான ரம்யாவை மாலை மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார் பார்த்திபன். இந்த நிகழ்ச்சிக்கு வரும் காவ்யா மனம் உடைந்து போய் நிற்கிறார். காவ்யாவை பார்த்த பார்த்திபனும் கண் கலங்கி நிற்கிறார். இருவரில் யாரவது விட்டு கொடுத்து போங்கள் என்று சொல்லி ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்