ஜீவா கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்ட காவ்யா.! என்ன பொசுக்குன்னு அடிச்சிட்டாங்க? ஈரமான ரோஜாவே ப்ரோமோ.!

வெளியிட்டது

ஈரமான ரோஜாவே சீரியலில் தற்போது அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது ஜீவா கன்னத்தில் காவ்யா ஓங்கி ஒரு அறை விட்டு இருக்கிறார். மேலும் நான் பார்த்தியை தான் காதலிப்பதாகவும் கூறியுள்ளார். ஈரமான ரோஜாவே சீசன் 1 கொடுத்த வெற்றியால் சீசன் 2 தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பார்த்திக்கு பிரியா என்கிற பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வரும். இதனால் பார்த்தியின் தம்பி ஜீவாவும் பிரியாவின் தங்கை காவியாவும் காதலித்து வந்தனர். திருமணத்தன்று கடைசி நிமிடத்தில் பிரியா கடத்தப்பட்டு விட்டதால் பார்த்தி பிரியாவின் தங்கை மற்றும் தம்பியின் காதலியான காவியாவை திருமணம் செய்து கொள்கிறார். இந்த திருமணத்தில் காவியாவிற்கு சிறிதும் விருப்பமில்லை. அவர் பார்த்தியின் தம்பி ஜீவாவைத்தான் காதலித்து வருகிறார். கடைசி நிமிடத்தில் பிரியா கிடைத்து விட்டதால் வேறு வழி இல்லாமல் ஜீவா பிரியாவை திருமணம் செய்து கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீவா கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்ட காவ்யா.! என்ன பொசுக்குன்னு அடிச்சிட்டாங்க? ஈரமான ரோஜாவே ப்ரோமோ.! 1

இந்தக் குழப்பங்கள் எல்லாம் முடிந்து அனைவரும் வீட்டில் ஒன்றாக வாழ தொடங்குகின்றனர். ஆனால் காவியாவிற்கு பார்த்தி மீது காதல் வரவே இல்லை. பார்த்தியை அவர் தொடர்ந்து வெறுத்துக் கொண்டே இருக்கிறார். மேலும் விவாகரத்து கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் பிரச்சனை முற்றிப் போக பார்த்தியின் தாயார் காவியாவை பார்த்தியின் வாழ்க்கையில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டு சதித்திட்டங்களை தீட்டி வருகிறார். அதன் வெற்றியாக தற்போது காவியாவும் பார்த்தியும் பிரிய முடிவெடுத்து இருக்கின்றனர். இந்த நிலையில் பார்த்தியின் அத்தை தேவி தனது மகளை எப்படி யாவது பாத்திக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று திருமண ஏற்பாடுகளை நடத்தி வருகிறார். இதனால் தேவி காவியா ஏற்கனவே காதலித்து ஒருவரை காதலித்த விஷயத்தை எல்லாம் வீட்டில் போட்டு உடைத்து விடுகிறார். இதனால் மேலும் மனம் உடைந்து போகும் பார்த்தி காவியாவிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்குகிறார்.

இந்த நிலையில் காவியா கழுத்தில் இருந்த தாலியை கழட்டுமாறு தேவி கூறுகிறார். காவியாவும் அழுது கொண்டே அந்த தாலியை கழட்டி விடுகிறார்.ஆனால் உண்மையில் காவியா வேறு ஒரு போலியான தாலியைத்தான் கழட்டிக் கொடுத்திருக்கிறார். பார்த்திபன் கட்டிய தாலியை அவர் கழட்டாமல் கழுத்திலேயே மறைத்து வைத்திருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த விஷயத்தை ஜீவாவிடம் காவியா அழுது கொண்டே கூறிக் கொண்டிருக்கிறார். மேலும் இன்னும் நீ என்னை காதலிக்கிறயா என்று கேட்ட ஜீவாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்துவிட்டு நான் பார்த்தியை தான் காதலிக்கிறேன் என்று பதில் கூறியுள்ளார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.! நீங்களும் அந்த ப்ரோமோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..! 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்