ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் இருக்கிறது. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்து வருகிறார். தற்போது இவர் பாலிவுட்டிலும் அறிமுகமாகி இருக்கிறார். வருண் தவான் நடிப்பில் உருவாகி இருக்கும் தெறி படத்தின் ரீமேக் ஆன பேபி ஜான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷ் தற்போது கதாநாயகியாக நடிப்பதை விட கதையின் நாயகியாக நடிப்பதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவர் இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் ரகு தாத்தா படத்தில் கதையின் நாயகியாக நடித்து உள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. அதுபோல அண்மையில் ஆடியோ வெளியிட்டு நிகழ்ச்சியும் நடந்து இருந்தது.
இந்நிலையில் சான் ரோல்டன் இசையில் இப்படத்தில் உருவாகி இருக்கும் ஏக் கவ் மே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் சான் ரோல்டன் இசையை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.
Embed Video Credits : SAREGAMA TAMIL