Categories: சினிமா

குழந்தை குட்டியா ரெண்டு பெரும் 100 வருஷம் வாழனும்..விருந்து கொடுத்த நயன், விக்கியை மனதார வாழ்த்திய முதியவர்கள்

வெளியிட்டது
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தை முன்னிட்டு இருவரும் செய்த செயல் ஒன்று ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் ஆதரவற்ற, பெற்றோர்களை இழந்த குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் உட்பட சுமார் 1 லட்சம் பேருக்கு அவர்கள் உணவு வழங்கியது தான். இதில் குழந்தைகள் மட்டுமே 18000 பேர். இதை இருவரும் வெளியில் சொல்லாமல்,  சத்தமில்லாமல் இந்த நற்செயலை செய்துள்ளனர். இதனால் இருவரையும் விருந்து சாப்பிட்டவர்கள் மனதார பாராட்டியுள்ளனர். வீடியோ கீழே உள்ளது
குழந்தை குட்டியா ரெண்டு பெரும் 100 வருஷம் வாழனும்..விருந்து கொடுத்த நயன், விக்கியை மனதார வாழ்த்திய முதியவர்கள் 1
தமிழகம் முழுவதிலும் உள்ள இல்லங்களில் பிரியாணி, சிக்கன் வறுவல், மீன் பொறிப்பு, கறிக்குழம்பு, பாயாசம், இனிப்பு வகைகள், கேக் என அமர்களப்படுத்தியுள்ளனர். பெரியவர்கள் இருக்கும் இல்லங்களில் அவர்களுக்கு அசைவ உணவு செரிக்காது என்பதால் சைவ உணவு பரிமாறப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு ஒருவருக்கும் பார்த்து பார்த்து ஏற்பாடுகளை செய்துள்ளனர். அந்த அந்த இல்லங்களில் வாழும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் நெகிழ்ச்சியுடன் பேசினர். வெகு நாட்களுக்குப் பிறகு தாங்கள் இது போல மிகப் பெரிய விருந்து சாப்பிட்டதாக கூறினர்.
மேலும் சிலர் பேசும் போது நயன்தாரா விக்னேஷ் சிவன் பல ஆண்டுகள் நன்றாக வாழ வேண்டும் என்றும், எங்கள் வயிறு நிறைந்தது மனம் மகிழ்ச்சியாக உள்ளது அவர்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்றும் வாழ்த்தினர். நயன்தாரா தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும், அடுத்த முறை அவர் குழந்தையுடன் வந்து எங்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்று வாழ்த்தினர். நயன்தாரா 1 லட்சம் பேருக்கு எல்லாம் உணவு வழங்கவில்லை, வதந்தி பரப்புகிறார்கள் என சிலர் கூறி வந்த நிலையில் சத்தமில்லாமல் ஆர்பாட்டமில்லாமல் பலரின் பசியாற்றி இருக்கிறார் நயன்தாரா…
கீழே உள்ள வீடியோவை பார்க்கவும், Video Code Embed Credits: News18 Tamilnadu

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்